ஐந்தாயிரம் கோடியில் 95% எங்கே? நயினார் நாகேந்திரன் கேள்வி!
மதுரையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாகவே உள்ளார்கள். ஆட்சி மாற்றத்திற்கான வரவேற்பு மக்களிடம் உள்ளது.
நெல் கொள்முதல் நிலையங்களில் முறையாக நெல் கொள்முதல் செய்யவில்லை. ஒரு மூட்டைக்கு ரூ.40 கமிஷன் கேட்கிறார்கள். பயிர்களுக்கு 5000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார்கள். ஆனால் அது எங்கே செலவு செய்தார்கள் என்பது தான் கேள்வி. எப்போது முதலமைச்சர், துணை முதல்வரிடம் கேட்டாலும் 95% எல்லா வேலையும் முடித்து விட்டோம், ஐந்து சதவீதம் பாக்கி உள்ளது என்கிறார்கள்.
ஐந்தாயிரம் கோடியில் 95% எங்கே? எந்த பணிக்காக செலவு செய்தார்கள் என்று கேட்டால் அவர்களால் சொல்ல முடியாது. குறுவை சாகுபடியை பொறுத்தவரை நெல்லுக்கான ஈரப்பதம் 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதம் வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்கள். மத்திய அரசு குழு ஆய்வு செய்து நிச்சயமாக விவசாயிகளுக்கு மத்திய அரசு உதவிகளை செய்யும் என்று தெரிவித்துள்ளார்.