பாஜகவுடன் கூட்டணியோ, மறைமுக உறவோ இருக்காது - தவெக
நடிகர் விஜய் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கினார். இக்கட்சி வரும் 2026 ஆம் ஆண்டு தமிழ் நாடு சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளது. தமிழக சட்டமன்றத்தேர்தலை பொருத்தவரை திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜயின் தவெக என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. பாமக, தேமுதிக, அமமுக ஆகிய கட்சிகள் தேர்தலுக்கான தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.
இந்த சூழலில் தவெக கொள்கை பரப்பு பொது செயலாளர் அருண்ராஜ் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தவெக தேர்தல் அறிக்கையில் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் அமைப்போம், ஏற்றுமதிக்கு போதிய ஒத்துழைப்பு தேவை. தவெக ஈரோடு கூட்டம் கண்டிப்பாக நடக்கும்.
அதிமுக வருவார்களா என்ற கேள்விக்கு பொருத்திருந்து பாருங்கள். பாஜகவுடன் கூட்டணியோ மறைமுக உறவோ கண்டிப்பாக இருக்காது” என்றார்.