For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும்...பாஜக உடன் கூட்டணி இல்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

12:03 PM Jan 29, 2024 IST | Web Editor
தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும்   பாஜக உடன் கூட்டணி இல்லை   முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
Advertisement

தேர்தல் நாள் நெருங்கும் நேரத்தில் எந்த கட்சிகளுடன் கூட்டணி என்று அறிவிக்கப்படும், தூக்கத்தில் இருந்து எழுப்பில் கேட்டாலும் சரி பாஜக உடன் கூட்டணி இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைத்தார்.

இக்குழுவினர் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை ஆலோசனை நடத்தினர். தேர்தல் பிரச்சார குழு கூட்டத்தில் கோகுல இந்திரா, செல்லூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், தளவாய் சுந்தரம், தம்பிதுரை, காமராஜ், தனபால், சிவபதி உள்ளிட்டோரும், ஏற்கனவே தேர்தல் பங்கீட்டு குழுவில் இடம் பெற்று உள்ள பெஞ்சமின், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி ஆகியோரும் உடன் இணைந்து கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

“இன்று மூன்று குழுக்களின் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் நாள் நெருங்க நெருங்க எந்த கட்சிகளுடன் கூட்டணி என்று அறிவிக்கப்படும். வடக்கில் இந்தியா கூட்டணியின் நிலைமை போல தமிழ்நாட்டிலும் நடக்கும். ஒவ்வொரு கட்சிகளுக்கும் மாறுபட்ட கருத்துக்கள், முரண்பாடுகள் உண்டு. இது உரிய காலம் இல்லை, உரிய காலம் வரும் போது எங்களுடன் யார் வருகிறார்கள் நாங்கள் எங்கு நிற்கிறோம் என்று தெரிய வரும். தூக்கத்தில் இருந்து எழுப்பில் கேட்டாலும் சரி பாஜக உடன் கூட்டணி இல்லை.

தேமுதிக, பாமக கட்சிகளுடன் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை என்பது கொள்கை முடிவு, அதுகுறித்து இப்போது சொல்ல முடியாது. பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தன்னை முன்னிலை படுத்துகிறார். நடக்காத விஷயத்தை சொல்லி திசை திருப்பினால் தமிழ்நாட்டு மக்களும் சரி, தொண்டர்களும் சரி யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எங்கள் நிலைப்பாடு என்ன என்று நேரம் வரும் போது தெரிவிப்போம்.

யார் தவறு செய்தாலும் சுட்டி காட்டி உரிமையை பெற்று தருவது அதிமுக கொள்கை. கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள். ஆளுநர் வேண்டாம் என்கிறார். அதை எல்லாம் இவர்கள் கூட்டணி மத்தியில் இருந்த போது செய்து இருக்கலாம். ஆசியாவில் மிகப்பெரிய குடும்பம் ஆனது தான் திமுகவின் சாதனை. மத்திய அரசு என்றாலும் சரி மாநில அரசு என்றாலும் சரி அவர்களின் மக்கள் விரோத செயல்களை தோலுரித்து காட்டுவோம்.

ஆளுநர் அதிகார மீரல் இருக்க கூடாது என்று குழு அமைத்தார்கள். அதை நடைமுறை படுத்தவில்லை. சென்னை மண்டல மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. 17 மாவட்டத்திற்கு மைய பகுதியை ஏற்படுத்தி விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், நெசவாளர்கள், மோட்டார் தொழிலாளர்கள், மீனவர்கள், அரசு அலுவலர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், மாணவர்கள், மகளிர், தொழில் முதலீட்டாளர்கள் போன்ற பல்வேறு தரப்பினர் தரவுகளை பெற அறிவிப்பு வெளியிடுவோம்.

விவசாயிகள் வாழ்க்கை தரம் மேம்பட வேண்டும். விவசாயிகளின் உண்மை தோழர் அதிமுக தான். இந்த தேர்தலில் விவசாயிகளின் ஒட்டு மொத்த விரோதமும் திமுகவை சேரும்இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
Advertisement