"அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை" - நயினார் நாகேந்திரன் பேட்டி!
சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் உறுதி. விஜய் தற்போது தான் கட்சி ஆரம்பித்திருக்கிறார். கூட்டம் வருவதை வைத்து திமுகவுக்கு நேரடி போட்டி என்றெல்லாம் சொல்ல முடியாது. திமுகவுக்கு போட்டி தவெக என ஜோசியம் சொல்ல முடியாது. அமித்ஷா சந்திப்பு குறித்தும், அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து எடப்பாடி பழனிச்சாமிடம் எதுவும் பேசவில்லை. அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை.
திமுக ஆட்சியில் எந்த பணியும் நடக்காமல் தற்போது உங்களுடன் ஸ்டாலின் எனும் நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர். இதனால் அதிகாரிகளுக்கு தான் தேவையில்லாத அலைச்சல். எடப்பாடி பழனிசாமி போன்று ஆட்சியில் இருந்தால் தான் உரிய தரவுகள் தெரியும். விஜய் புதிதாக கட்சி துவங்கியவுடன் உரிய தரவுகள் எதுவும் இல்லாமல் பேசி வருகிறார். அக்டோபர் 11 ஆம் தேதி மதுரையில் இருந்து நான் சுற்றுப்பயணத்தை தூவங்குகிறேன். கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்பார்.
பாஜக எந்த கட்சியின் உள் கட்சி விவகாரத்திலும் தலையிடாது" என்று தெரிவித்துள்ளார்.