பிரதமர் மோடி சிறிது நேரம் ஒதுக்கி பாஜகவின் ’போலி குஜராத்’ மாடலைப் பார்ப்பார் - காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே!
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற போலி சம்பவங்களைக் குறிப்பிட்டு 'போலி குஜராத் மாடல்' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே என்று விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் (எக்ஸ்) பதிவில் கூறியிருப்பதாவது,
“பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் சிறிது நேரம் ஒதுக்கி பாஜகவின் போலி குஜராத் மாடலை கவனிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். குஜராத்தில் நடைபெற்ற போலியான சம்பவங்களில் சிலவற்றை இங்கு பட்டியலிட்டுள்ளேன்.
கிரண் பாய் படேல் என்பவர் குஜராத்தில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு சென்று, பிரதமர் அலுவலக அதிகாரி என்ற பெயரில் ராணுவத்தை ஏமாற்றுகிறார். அதிர்ச்சியூட்டும் வகையில், மிகவும் பாதுகாப்பு வாய்ந்த பகுதிகளான அமன் சேது உள்ளிட்ட இடங்களுக்கு அவர் அரசாங்க அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார்.
விராஜ் படேல் என்பவர் குஜராத்தின் முதலமைச்சர் அலுவலக அதிகாரி என்று கூறி மோசடியில் ஈடுபட்டார். மே மாதம் அவர் கைது செய்யப்பட்ட பிறகும் காவல்துறையின் பிடியில் இருந்து தப்பினார். 2023 இறுதியில், அவர் அஸ்ஸாம்-மிஸோரம் எல்லையில் பிடிபட்டார்.
Minimum Governance, Maximum Fakery !
Pradhan Mantri ji is on a visit to Gujarat.
We expect him to take some time out and look at BJP's Fake Gujarat Model.
Here are at least 10 instances of FAKERY which thrived in Gujarat. Did the BJP Govt turn a blind eye?
1. Fake officer of… pic.twitter.com/k3qKUiq7LJ
— Mallikarjun Kharge (@kharge) January 9, 2024
மோர்பி மாவட்டத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாக இயங்கி வந்த ஒரு போலி சுங்கச்சாவடி, வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.75 கோடிக்கு மேல் கட்டணம் வசூலித்தது.
இதே போல ஜூனாகத் மாவட்டத்தில் பயணிகளிடம் இருந்து லட்சக்கணக்கில் வசூல் செய்த மற்றொரு போலி சுங்கச்சாவடி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆளும் குஜராத்தின் தாஹோத் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நீர்ப்பாசனத் துறையுடன் தொடர்புடைய 6 போலி அரசு அலுவலகங்கள் இயங்கி வந்ததால் ரூ.18.59 கோடி மதிப்பிலான மோசடி நடைபெற்றுள்ளது.
குஜராத் மாநிலம் சோட்டா உதேபூர் மாவட்டத்தில் உள்ள போடேலி தாலுகாவில் போலி அரசு அலுவலகம் அமைத்து அரசு அதிகாரி போல் போலி கையெழுத்து, அரசு முத்திரைகள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களை தயாரித்து ரூ.4 கோடிக்கு மேல் அரசு மானியமும் பெற்றுள்ளனர்.
கேடா மாவட்டத்தில் போலி இருமல் மருந்து குடித்து 5 பேர் உயிரிழந்தனர். அகமதாபாத்தில் தயாரிக்கப்பட்ட போலி இருமல் மருந்து இடைத்தரகர்கள் மூலம் கிராமங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அதே மாவட்டத்தில் உள்ள பாஜகவின் தாலுகா பிரிவின் பொருளாளர் ஆவார்.
குஜராத்தில் ஒரு சீன நாட்டவரும் அவரது கூட்டாளிகளும் போலி கால்பந்து சூதாட்ட செயலியை உருவாக்கி 1,200 பேரிடம் சில கோடிகளை ஏமாற்றியுள்ளனர்.
காந்திநகர், அகமதாபாத் மற்றும் வதோதராவில் 17 போலி நிறுவனங்கள் நீண்ட நாட்களாக விசா மற்றும் பாஸ்போர்ட் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளன. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022ஆம் ஆண்டு அறிக்கை, நாட்டில் போலி 2,000 ரூபாய் நோட்டுகள் மோசடியில் பாஜக ஆளும் குஜராத் மாநிலம், முன்னணியில் இருப்பதாகக் கூறுகிறது.
குஜராத்தில் அதிகபட்சமாக 11.28 லட்சம் போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளின் மதிப்பில் இது 98% ஆகும். எனவே பாஜகவின் குஜராத் மாடல் என்பது ஒரு பொய்யான மாடலாகும்.” என்று தெரிவித்துள்ளார். இதனை காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.