For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாடாளுமன்ற தேர்தல் 2024 : யாருக்கு பெரும்பான்மை?- கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன..?

08:14 PM Feb 08, 2024 IST | Web Editor
நாடாளுமன்ற தேர்தல் 2024   யாருக்கு பெரும்பான்மை   கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன
Advertisement

நாடாளுமன்ற தேர்தல் 2024 குறித்த  கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இது குறித்து விரிவாக காணலாம்.

Advertisement

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுதும் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. பாஜகவை வீழ்த்த 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது. மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி வருகின்றன.

மக்களவை தேர்தலுக்கான  தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.  இதனைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 2-வது வாரம் முதல் மே 2-வது வாரம் வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்படும் என அரசியல் வல்லுநர்கள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இதற்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும்  மக்களவைத்  தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன.

குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தையை இறுதிசெய்து, தொகுதி பங்கீட்டை முடிவு செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான INDIA - கூட்டணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை INDIA - கூட்டணி திமுக தலைமையில் களம் இறங்குகிறது.

இந்த நிலையில் ‛மூட் ஆப் தி நேஷன்' என்ற தலைப்பில் ‛இந்தியா டுடே' மற்றும் ‛ சி வோட்டர்ஸ்' இணைந்து நாடு முழுவதும் கருத்துக்கணிப்பு நடத்தியிருக்கிறது. இதன்படி கடந்த ஆண்டு டிச.,15 முதல் 2024 ஜன.,28 வரை 35,801 பேரிடம் கருத்து கேட்கப்பட்டிருக்கிறது. இதன்படி முடிவுகள் வெளியாகியுள்ளன.

உத்தர பிரதேசம் : 

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை  -80

தேசிய ஜனநாயக கூட்டணி -  70 தொகுதிகள்

சமாஜ்வாதி கட்சி -07தொகுதிகள்

காங்கிரஸ் கட்சி - 01

மேற்கு வங்கம் : 

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை  -42
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி - 22
தேசிய ஜனநாயக கூட்டணி  - 19

பீகார் : 

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை : 40
தேசிய ஜனநாயக கூட்டணி  -32
இந்தியா கூட்டணி -08

கர்நாடகா

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை - 28
தேசிய ஜனநாயக கூட்டணி-24
இந்தியா கூட்டணி -4

ஜார்க்கண்ட்

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை : 14
தேசிய ஜனநாயக கூட்டணி -12
இந்தியா கூட்டணி - 2

அசாம்

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை  -14
தேசிய ஜனநாயக கூட்டணி - 12
இந்தியா கூட்டணி-02

பஞ்சாப்

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை -13
தேசிய ஜனநாயக கூட்டணி -02
ஆம் ஆத்மி -05
காங்கிரஸ் -05
அகாலிதளம் -01

ஹரியானா

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை -10
தேசிய ஜனநாயக கூட்டணி - 8
இந்தியா கூட்டணி - 2

உத்தராகண்ட்

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை :05
தேசிய ஜனநாயக கூட்டணி - 05

காஷ்மீர்

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை -  05
இந்தியா கூட்டணி -  03
தேசிய ஜனநாயக கூட்டணி -  2

இமாச்சல் பிரதேசம்

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை : 04
தேசிய ஜனநாயக கூட்டணி :04

ஆந்திர பிரதேசம்  

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை -  25
தெலுங்கு தேசம் கட்சி 17
ஓய்எஸ்ஆர்சிபி - 08

தெலங்கானா

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை : 17
இந்தியா கூட்டணி -10
தேசிய ஜனநாயக கூட்டணி - 03
பி.ஆர்.எஸ்.,--03
ஏஐஎம்ஐஎம் -01

டெல்லி :

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை :07
தேசிய ஜனநாயக கூட்டணி - 07

மகாராஷ்டிரா

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை : 48
தேசிய ஜனநாயக கூட்டணி- 22
இந்தியா கூட்டணி -26 தொகுதிகள்

Tags :
Advertisement