"அதிமுக ஆட்சியில் ஸ்டார்ட் அப் குறித்து எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை" - அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் அக்டோபர் 9-ம் தேதி தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் உலகபுத்தொழில் மாநாடு கோயம்புத்தூர் மாவட்டம் கொடிசியாவில் நடைபெறுகிறது. இதனையொட்டி முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் அமைச்சர் தா.மோ அன்பரசன் தலைமையில் தொழில், கல்வி மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பிரதிநிதிகள் உடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, "அக்டோபர் 9,10 தேதியில் உலக புத்தொழில் மாநாடு நடைபெறுகிறது. முதல்வர் அந்த மாநாட்டை துவங்கி வைக்கிறார். அதன் லோகோ, இணையதளத்தை துணை முதலமைச்சர் ஏற்கனவே துவக்கி வைத்துள்ளார். இதில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்கேற்கின்றனர்.
அதிமுக ஆட்சியில் ஸ்டார்ட் அப் குறித்து எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை. ஆனால் தற்போது முதல்வர் செய்து வருகிறார். 4 ஆண்டுகளில் 79 கோடியே 49 லட்சம் ஸ்டார்ட் அப்பில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 43 SCST நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறோம். 4 ஆண்டுகளில் 79 கோடியே 49 லட்சம் ஸ்டார்ட் அப்பில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறோம். அதிமுக ஆட்சியில் ஸ்டார்ட் அப் தரவரிசையில் கடைசியில் இருந்தது. தற்போது 3 வது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. MSME க்காக நாங்கள் 250 கோடி ரூபாய் கட்டணம் செலுத்துகிறோம். MSMEயில் அதிக தொழில் நிறுவனங்களை நாங்கள் ஏற்படுத்தி உள்ளோம். குறைகள் புகார் இருந்தால் தெரிவித்தால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழக அரசு GST சம்பந்தமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு எதிர்கட்சிகள் என்ன சொல்கிறார்கள்? நமக்கு ஒத்துவராத அரசால் (பாஜக) நாங்கள் கூறுவதை ஏற்பதில்லை. 39 உலக நாடுகளில் 264 பேர் மாநாட்டில் பங்கேற்கின்றனர். மத்திய அரசின் 10 துறைகள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள்.
தமிழ்நாடு மற்றும் மற்ற மாநிலங்களுடன் இணைந்து பணியாற்றும் புத்தொழில் முனைவோர்களும் பங்கேற்கின்றனர். 750-க்கும் மேற்பட்ட அரங்குக்கள் அமைக்கப்பட்டு மாநாடு நடைபெற உள்ளது. பள்ளி கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புகள் இடம்பெற உள்ளது. 150 புத்தொழில் முனைவோரின் சந்திப்பும் நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளார்.