“இடஒதுக்கீட்டை ஒழிக்கும் முயற்சியில் மோடி அரசு” - #Congress குற்றச்சாட்டு!
SC, ST, OBC பிரிவினரை இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்பதற்காக பாஜக வேண்டுமென்றே வேலை செய்வதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
தனியார் துறையில் சிறப்பாக செயல்படும் தலைமை செயல் அதிகாரிகளை, நேரடியாக ஐஏஎஸ் அதிகாரிகளாக நியமிக்கும் திட்டம் கடந்த 2018-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் இதுவரை 63 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதே திட்டத்தின் கீழ் புதிதாக 45 பேரை நியமிக்க மத்தியஅரசு பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) அண்மையில் விளம்பரம் வெளியிட்டது.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “அரசியல் சட்டத்தை கிழித்த பாஜக, இடஒதுக்கீடு மீது இரட்டை தாக்குதல்! முதலாவதாக, மத்திய அரசின் இணைச் செயலாளர், இயக்குநர்கள் மற்றும் துணைச் செயலாளர் ஆகிய 45 பணியிடங்களை லேட்டரல் என்ட்ரி மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை இன்று மோடி அரசு வெளியிட்டுள்ளது. இதில் SC, ST, OBC மற்றும் EWS க்கு இட ஒதுக்கீடு உண்டா? நன்கு திட்டமிடப்பட்ட சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக, SC, ST, OBC பிரிவினரை இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்பதற்காகவே பாஜக வேண்டுமென்றே வேலைகளில் இத்தகைய ஆட்சேர்ப்புகளைச் செய்கிறது.
संविधान को तार-तार करती भाजपा ने किया आरक्षण पर डबल वार !
पहला, आज मोदी सरकार ने केंद्र में Joint Secretary, Directors and Deputy Secretary के कम से कम 45 पद Lateral Entry द्वारा भरने का विज्ञापन निकाला है। क्या इसमें SC,ST, OBC एवं EWS आरक्षण है?
सोची समझी साज़िश के तहत भाजपा…
— Mallikarjun Kharge (@kharge) August 17, 2024
இரண்டாவதாக, உ.பி.யில் 69,000 உதவி ஆசிரியர்கள் நியமனத்தில் நடந்த இடஒதுக்கீடு ஊழல், உயர்நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தற்போது அம்பலமாகியுள்ளது. மார்ச் 2024 இல், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு ஊழலில் பிரதமருக்கு கடிதம் எழுதி, தாழ்த்தப்பட்ட வேட்பாளர்களின் குரலை உயர்த்தினார் ராகுல் காந்தி. தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் அரசியலமைப்புச் சட்டப்படி இடஒதுக்கீடு உரிமை பறிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு அநீதி இழைத்து இந்தப் பதவிகளை யோகி அரசு நிரப்பியது.
வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு முறைகேடுகள் குறித்து பாஜகவின் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஏன் அரசின் கவனத்தை ஈர்த்தார் என்பது இப்போது நமக்குத் தெரியும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நீதியின் விதிகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவது அவசியம். அதனால்தான் காங்கிரஸ் கட்சி சமூக நீதிக்காக ஜாதிவாரி கணக்கெடுப்பு கோருகிறது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.