For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மக்களவைத் தேர்தல்: தமிழ்நாட்டில் யார் யாருக்கு எத்தனை இடங்கள்? எவ்வளவு வாக்கு சதவிகிதம்?

01:46 PM Jun 05, 2024 IST | Web Editor
மக்களவைத் தேர்தல்  தமிழ்நாட்டில் யார் யாருக்கு எத்தனை இடங்கள்  எவ்வளவு வாக்கு சதவிகிதம்
Advertisement

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 4முனைப் போட்டி - யார் யாருக்கு எத்தனை இடங்கள்? எவ்வளவு வாக்கு சதவிகிதம்? என்பதை இப்போது பார்க்கலாம்.

Advertisement

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDIA கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது . INDIA கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

 தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி  பெறவில்லை. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ள 40 தொகுதிகளிலும் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்,  விடுதலை சிறுத்தைகள்,  மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெற்றி வாகை சூடியுள்ளன.

மத்தியில் இரண்டு முக்கிய கூட்டணிகள் தேர்தலை எதிர்கொண்டாலும் தமிழ்நாட்டைப்  பொறுத்த வரை நான்கு முனை போட்டி நிலவியது.  திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி,  அதிமுக தலைமையிலான கூட்டணி,  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்து களம் கண்டன.  இந்த நிலையில் தமிழ்நாட்டில் கட்சிவாரியாக வெற்றி பெற்ற இடங்கள் மற்றும் அவர்களுக்கு கிடைத்த வாக்கு சதவிகிதம் குறித்து விரிவாக காணலாம்.


திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி
  • திராவிட முன்னேற்றக் கழகம் - வெற்றி பெற்ற இடங்கள் 22 (26.3%)
  • தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி- வெற்றி பெற்ற இடங்கள் 9 (10.67)
  • விடுதலை சிறுத்தைகள் கட்சி- வெற்றி பெற்ற இடங்கள் 2
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி- வெற்றி பெற்ற இடங்கள் 2 (2.52%)
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- வெற்றி பெற்ற இடங்கள் 2 (2.15%)
  • இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் - வெற்றி பெற்ற இடம் 1 (1.17%)
  • மறுமலர்ச்சி திமுக - வெற்றி பெற்ற இடம் 1
  • மொத்தம் : வெற்றி பெற்ற இடங்கள் 39  (46.97%) 
அதிமுக கூட்டணி
  • அதிமுக வெற்றி பெற்ற இடங்கள் - 0 ( 20.46%)
  • தேமுதிக வெற்றி பெற்ற இடங்கள் - 0 (2.56%)
  • புதிய தமிழகம் - வெற்றி பெற்ற இடம் - 0
  • எஸ்டிபிஐ கட்சி - 0
  • மொத்தம் : வெற்றி பெற்ற இடங்கள் 0  (23.05%) 
பாஜக தலைமையிலான NDA கூட்டணி
  • பாஜக - வெற்றி பெற்ற இடங்கள் 0 (11.24%)
  • பாமக - வெற்றி பெற்ற இடங்கள் 0 
  • தமாகா - வெற்றி பெற்ற இடங்கள் 0
  • அமமுக - வெற்றி பெற்ற இடங்கள் 0
  • தமமுக -  வெற்றி பெற்ற இடம் 0
  • புதிய நீதிக் கட்சி - வெற்றி பெற்ற இடம் 0
  • சுயேட்சை - வெற்றி பெற்ற இடம் 0
  • மொத்தம் : வெற்றி பெற்ற இடங்கள் 0  (18.28%) 
நாம் தமிழர் கட்சி
  • நாம் தமிழர் கட்சி - வெற்றி பெற்ற இடங்கள் 0 (8.10%)
மற்றவை :
  • பகுஜன் சமாஜ் கட்சி 0 ( 0.31%)
  • நோட்டா (1.07%)
Tags :
Advertisement