For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"#PMModi -ஐ அதிகாரத்திலிருந்து நீக்கும் வரை சாகமாட்டேன்" - மல்லிகார்ஜுன் கார்கே!

07:11 PM Sep 29, 2024 IST | Web Editor
  pmmodi  ஐ அதிகாரத்திலிருந்து நீக்கும் வரை சாகமாட்டேன்    மல்லிகார்ஜுன் கார்கே
Advertisement

பிரதமர் மோடியை அதிகாரத்திலிருந்து நீக்கும் வரை சாகமாட்டேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்தார்.

Advertisement

90 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ஜம்மு-காஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில், முதல்கட்டமாக கடந்த செப்டம்பர் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 61.38 சதவீத வாக்குகள் பதிவானது. இதனையடுத்து, கடந்த செப்.25ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 56 சதவீதம் ஓட்டு பதிவாகி இருந்தது. தொடர்ந்து, 3வது மற்றும் இறுதி கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்டோபர் 1ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் இறுதி கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜஸ்ரோட்டா பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது கார்கேவுருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை இருக்கைக்கு அழைத்துச் சென்று உட்காரவைத்தனர்.

இதையும் படியுங்கள் : Viral | நெடுஞ்சாலை பெயர்ப்பலகையை ஜிம்மாக மாற்றிய இளைஞர் – வைரலாகும் வீடியோ!

சிறிது நேரம் ஓய்வெடுத்தபின் மீண்டும் பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜுன் கார்கே பேசியதாவது :

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து திரும்பப் பெற்றுத்தர போராடுவோம். எனக்கு 83 வயதாகிறது. அதே வேளையில், வெகு சீக்கிரத்தில் நான் ஒன்றும் சாகப் போவதில்லை. பிரதமர் மோடியை அதிகாரத்திலிருந்து நீக்கப்படும் வரை உயிருடன் இருப்பேன். பாஜக ஏராளமான வாக்குறுதிகளை ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அளித்திருந்தது. ஆனால் அவர்கள் எதையும் செய்யவில்லை.

இப்போது அமித்ஷா 5 லட்சம் வேலைவாய்ப்புகளை அளிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? வேலைவாய்ப்புகளை ஏன் வழங்கவில்லை? ஜம்மு காஷ்மீரில் 65 சதவிகித அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. இத்தனை ஆண்டுகளாக பணியிடங்களை நிரப்பாமல் இருந்தது ஏன்? உண்மை என்னவென்றால், மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
Advertisement