For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திமுகவிற்கு நாட்டின் இறையாண்மையின் மீது நம்பிக்கை இருக்கிறதா? - அண்ணாமலை கேள்வி!

04:08 PM Apr 01, 2024 IST | Web Editor
திமுகவிற்கு நாட்டின் இறையாண்மையின் மீது நம்பிக்கை இருக்கிறதா    அண்ணாமலை கேள்வி
Advertisement

நாட்டின் இறையாண்மை மீது திமுகவுக்கு நம்பிக்கை இருக்கிறதா? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

கோவை அவிநாசி சாலையில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் கட்சியின் மாநிலத் தலைவரும்,  பாஜக வேட்பாளருமான அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: 

“கச்சத் தீவு விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெளிவான விளக்கம் அளித்துள்ளார். திமுகவிற்கு சில கேள்விகளை வைத்திருக்கிறேன். திமுகவினர் தமிழக மக்களை வஞ்சித்திருக்கிறார்கள், ஏமாற்றி இருக்கிறார்கள். கச்சத்தீவை கொடுப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு வெளியுறவுத்துறை அமைச்சர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து அனுமதி பெற்றதை குறிப்புகள் நமக்கு காட்டுகிறது.

கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டதில் கருணாநிதியின் முடிவும் இருந்தது. சிறிய அளவில் போரட்டம் நடத்துகிறேன் என கருனாநிதி, வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசியிருக்கிறார். கச்சத்தீவை திட்டமிட்டு சதி செய்தான் இலங்கைக்கு கொடுத்துள்ளார்கள். இதில் திமுகவுக்கு முழு பங்களிப்பு இருக்கிறது. 21 முறை நாடகத்துக்காக முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.இதுதான் முதல் கேள்வி.  இந்திய இறையாண்மையின் மீது திமுகவுக்கு நம்பிக்கை இருக்கிறதா? 1960-ம் ஆண்டு பேசிய அதே பேச்சை தான் பேசப்போகிறார்களா? ஆழ்கடலில் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் திமுக தான் காரணம்.  வேறு யாரும் இல்லை. பாஜக சார்பில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் செய்து வருகிறோம். எல்லை சுருங்கிய பிறகு எப்படிப்பட்ட பிரச்னைகளை உருவாக்கியிருக்கிறது.

சர்வதேச எல்லைக்கு செல்லும்போது மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். ஆர்கல் 6 ஐயும் காக்க காங்கிரஸ் வாபஸ் வாங்கிக் கொண்டார்கள். இன்றைய நோக்கம் திமுகவின் போலி முகத்திரையை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்த வேண்டும். தமிழக அரசின் தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது இடம் பெறும். தேர்தல் சமயம் என்று பார்க்க வேண்டாம்.ராமநாதபுரத்தில் பொதுக்கூட்டத்துக்கு ஒரு மாதத்திற்கு முன்பு முதலமைச்சர் மிக கடுமையாக பேசியிருந்தார். அதற்குப் பிறகு தான் இது என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.  இதில் திமுகவின் பங்கு என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இது இந்திய அளவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. மீனவர்கள் பிரச்னையை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம் என வெளியுறவுத்துறை அமைச்சர் கூறி இருக்கிறார்.

திமுகவின் போலி முகத்திரையை கிழிக்க வேண்டும். யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லாமல் பங்களாதேஷுக்குள் சென்றுதான் இந்திய எல்லைக்குள் செல்ல முடியும் என்ற எல்லை தீர்வை கண்டுபிடித்திருக்கிறோம்.  கார்கே சரித்திரம் தெரியாமல் பேசுகிறார். கச்சத்தீவு விவகாரத்தில் இந்தியாவுக்கு ஒரு பைசா கூட ஆதாயம் கிடையாது.  இந்திய இறையான்மை கேள்விக்குறியாக்கி இருக்கிறது”

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

Tags :
Advertisement