மத்திய பட்ஜெட்டில் சுங்க வரி குறைப்பு | ரூ.6,000 வரை குறைந்த ஐபோன் விலை
இந்தியாவில் ஐபோன் விலை குறைந்து, ஆப்பிள் நிறுவனம் அதன் விலையை ₹ 6000 குறைக்கிறது.
மொபைல் போன்கள் மற்றும் சார்ஜர்கள் மீதான இறக்குமதி வரியை 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கும் பட்ஜெட் முன்மொழிவுக்கு பிறகு ஐபோன் மாடல்களின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் மொபைல் போன்களுக்கான இறக்குமதி வரியை குறைத்ததை அடுத்து ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன் விலையை ரூ.300-6,000 வரை குறைத்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய கட்டணப் பட்டியலின்படி, நாட்டில் இறக்குமதி செய்யப்படும் ஐபோன் ப்ரோ மாடல்களின் விலை ரூ.5,100-6,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், ஆப்பிள் முன்னதாக ஐபோன் 15 ப்ரோவை ரூ.1,34,900 தொடக்க விலையிலும், ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலை ரூ.1,59,900 தொடக்க விலையிலும் விற்பனை செய்து வந்தது.
இந்திய வாடிக்கையாளர்களுக்கு 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் ப்ரோ மாடல் 3.7 சதவீத விலைக் குறைப்புக்குப் பிறகு ரூ.1,29,800 ஆக இருக்கும். அதேபோல், 256 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட ஐபோன் ப்ரோ மேக்ஸின் ஆரம்ப நிலை விலை ரூ.1,59,900ல் இருந்து ரூ.1,54,000 ஆக குறைந்துள்ளது. இதனுடன், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் 13, 14 மற்றும் 15 சீரிஸ் ஐபோன்களின் விலையையும் ரூ.300 குறைத்துள்ளது.