For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பாஜகவினர் ஜாதியின் பெயரால் மக்களைத் தூண்டிவிடக் கூடாது!” - மல்லிகார்ஜுன கார்கே பேட்டி!

06:06 PM Dec 20, 2023 IST | Web Editor
“பாஜகவினர் ஜாதியின் பெயரால் மக்களைத் தூண்டிவிடக் கூடாது ”   மல்லிகார்ஜுன கார்கே பேட்டி
Advertisement

பாஜகவினர் ஜாதியின் பெயரால் மக்களைத் தூண்டிவிடக் கூடாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல் விவகாரம் தொடா்பாக விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினா்கள் 142 பேர் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பதாகைகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் போது, திரிணமூல் காங்கிரஸின் எம்.பி. கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கரைப் போன்று நகைச்சுவையாக அனைவரின் முன்னிலையில் செய்து காட்டினார். இந்த செயலைக் குறிப்பிட்டு, ஜகதீப் தன்கர் விவசாயியின் மகன் என்பதால்தான் கிண்டல் செய்ததாகவும், இதன்மூலம் ஜாட் சமூக மக்களை அவர் அவமதித்து விட்டதாகவும் பாஜகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

மாநிலங்களவைத் தலைவரின் கடமை என்பது அவைக்குள் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாகும். அவைக்குள் ஜாதியைப் பற்றி பேசுவதன் மூலம் மக்களை தூண்டிவிடக் கூடாது. நான் கூட அவையில் பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. உடனே நான் தலித் என்பதால்தான் எனக்கு பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று கூறலாமா? இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags :
Advertisement