For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் 110 பேர் முஸ்லிம்களா? உண்மை என்ன?

10:00 AM Jun 12, 2024 IST | Web Editor
மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம் பி க்களில் 110 பேர் முஸ்லிம்களா  உண்மை என்ன
Advertisement

This news fact checked by Newschecker

Advertisement

மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் 20% அதாவது 110 பேர் முஸ்லிம்கள் என வைரலாகிவரும் தகவல் பொய்யானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியானது. இதில் இந்தியா கூட்டணி 234 தொகுதிகளையும், என்டிஏ கூட்டணி 293 தொகுதிகளையும் கைப்பற்றின. தொடர்ந்து, பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். நாடாளுமன்ற தேர்தலில் 20% எம்பிக்கள் அதாவது 543ல் 110 பேர் முஸ்லிம்கள் என தகவல் வைரலாகி வருகிறது.

இதுகுறித்த உண்மையை சரிபார்க்க newschecker சார்பில் முடிவு செய்யப்பட்டது.

உண்மை சரிபார்ப்பு:

"முஸ்லீம் எம்.பி.க்கள் மக்களவை" என்ற முக்கிய வார்த்தை தேடல் நடத்தப்பட்டது. தன் விளைவாக “இந்த ஆண்டு மக்களவைக்கு 24 முஸ்லிம்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டது” போன்ற பல செய்தி அறிக்கைகளை கண்டறியச் செய்தது. இந்த எண்ணிக்கை 2019-ம் ஆண்டை விட இரண்டு பேர் குறைவு என கண்டறியப்பட்டது.

அறிக்கைகளின் படி,  2019 மக்களவைத் தேர்தலில் 115 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டதாகவும், இந்தாண்டு மக்களவைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 78 முஸ்லிம்கள் போட்டியிட்டனர். மேலும், இந்தாண்டு மக்களவைத் தேர்தலில் 110 முஸ்லிம் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக எந்த அறிக்கையும் காணவில்லை.

ஜூன் 8, 2024 தேதியன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில், “இப்போது மக்களவையின் மொத்த பலத்தில் முஸ்லிம்கள் 4.42% மட்டுமே உள்ளனர். இது எல்லா காலத்திலும் இரண்டாவது மிகக் குறைந்த பங்காகும். 1980ல் 49 முஸ்லீம் எம்.பி.க்கள் (9.04%), 1984ல் 45 முஸ்லிம் எம்.பி.க்கள் (8.3%) தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவைதவிர, மக்களவையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 40ஐத் தாண்டவில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல், ABP செய்திகளில் இதுபோன்ற அறிக்கையை காண முடிந்தது.

ஜூன் 7, 2024 அன்று மிண்ட் செய்தியில், “என்டிஏ கூட்டணியில் முஸ்லீம் எம்.பி.க்கள் இல்லை, இந்திய கூட்டணியில் 7.9% முஸ்லிம் எம்.பி.க்கள் உள்ளனர். என்டிஏ-வில் கிறிஸ்தவ எம்.பி.க்கள் இல்லை, இந்தியா கூட்டணியில் 3.5% கிறிஸ்தவ எம்.பி.க்கள் உள்ளனர். என்டிஏ கூட்டணியில் ஒரு சீக்கிய எம்.பி கூட இல்லை, அதே சமயம் இந்தியா கூட்டணியில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த 5% எம்.பி.க்கள் உள்ளனர். ஒட்டுமொத்தமாக, இந்த முறை 24 முஸ்லிம் எம்.பி.க்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்” என்று செய்தி வெளியாகியிருந்தது. இதேபோன்று The Print செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையை இங்கே காணலாம்.

முடிவு:

எனவே, மக்களவைத் தேர்தல் 2024-ல் 24 முஸ்லிம் எம்.பி.க்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர் எனவும், வைரலாகிவருவது போல 110 பேர் அல்ல எனவும் நிரூபணம் செய்யப்பட்டது.

Note : This story was originally published by Newschecker and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement