For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சிறுமியின் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவு செய்த இளைஞர் போக்சோவில் கைது!

02:07 PM Nov 21, 2023 IST | Web Editor
சிறுமியின் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவு செய்த இளைஞர் போக்சோவில் கைது
Advertisement

ஜெயங்கொண்டம் அருகே 16 வயது சிறுமியின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் தவறாக பதிவு செய்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Advertisement

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உத்திரக்குடி கிராமம் தெற்கு
தெருவை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (23).   இவர் அதே கிராமத்தில் உள்ள 16 வயது
சிறுமியின் கண்களை சமூக வலைதளங்களில் தவறாக பதிவு செய்துள்ளார்.   இது
குறித்து சிறுமியின் பெற்றோர் நவநீதகிருஷ்ணன் பெற்றோர்களிடம் கூறி கண்டித்துள்ளனர்.  இதனால் ஆத்திரமடைந்த நவநீதகிருஷ்ணன் மீண்டும் அந்த 
சிறுமியின் பெயரின் முதல் எழுத்தையும்,  அவருடைய பெயரின் (கிருஷ்ணன்) முதல் எழுத்தையும் சேர்த்து  எடிட்டிங் செய்து சமூக வலைதளத்தில் குரூப் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:  மீன்பாசி குத்தகையை தமிழக அரசு நடத்த வேண்டும் | மீனவர்கள் கோரிக்கை!

அதில் அந்த சிறுமியின் முகத்தை இதயத்தில் வைத்து டிசைன் செய்து அதை தன்னுடைய போட்டோவுடன் இணைத்து,  தான் பயன்படுத்தி வரும் குரூப்பில் போட்டார்.  இதனை தெரிந்து கொண்ட சிறுமி தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.   சிறுமியின் பெற்றோர் நவநீதகிருஷ்ணனின் பெற்றோர்களிடம் கூறி அவரை கண்டிக்க அறிவுறுத்தியுள்ளனர்.  நவநீதகிருஷ்ணனை அவரது பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் கோபமடைந்த நவநீதகிருஷ்ணன் சிறுமியின்  வீட்டிற்கு சென்று சிறுமியின் பெற்றோர்களை மிரட்டியுள்ளார். 

மேலும் அவர்களை அவமரியாதையாகவும் பேசியுள்ளார்.  இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.  இந்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் நவநீதகிருஷ்ணனை அழைத்து,  செல்போனில் உள்ள பதிவுகளை பார்த்து குற்றத்தை உறுதி செய்தனர்.  தொடர்ந்து நவநீதகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து போக்சோவில் கைது செய்தனர்.  அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags :
Advertisement