For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ராஜபாளையம் | கோயில் காவலாளிகள் கொலை வழக்கு - ஒருவர் சுட்டுப்பிடிப்பு!

ராஜபாளையம் கோயில் காவலாளிகள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
08:09 AM Nov 12, 2025 IST | Web Editor
ராஜபாளையம் கோயில் காவலாளிகள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
ராஜபாளையம்   கோயில் காவலாளிகள் கொலை வழக்கு   ஒருவர் சுட்டுப்பிடிப்பு
Advertisement

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்தூரை அடுத்த தேவதானம் பகுதியில் நச்சாடை தவிர்த்தருளிய சாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் 300 ஆண்டுகளுக்கும் மேலான பழைமை வாய்ந்த கோயிலாகும். இக்கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கி வருகிறது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வரும் இக்கோயிலுக்கும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு செய்வது வழக்கம்.

Advertisement

இந்தக் கோயிலில் தெற்கு தேவதானம் பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து (50), வடக்கு தேவதானம் பகுதியைச் சேர்ந்த (65) சங்கரபாண்டியன் ஆகியோர் இரவு நேர காவலர்களாகப் பணயாற்றி வந்தனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு வவக்கம்போல் கோயிலில் காவல் பணியை மேற்கொண்டனர். இந்த சூழலில், நேற்று காலை இக்கோயிலின் பகல் நேர காவலாளியான மாடசாமி என்பவர் கோயிலின் கதவைத் திறந்துள்ளார்.

அப்போது, கோயில் வளாகத்திலேயே காவலாளிகள் இருவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இச்சம்பவம் குறித்து சேத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலறிந்த  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போலீசார், இருவரின் உடலையும் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், போலீசார் இச்சம்பவம் குறித்து நடத்தி வந்தனர். இந்த நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய நாகராஜ் என்பவரை போலீசார் சுட்டு பிடித்தனர். எஸ் ஐ கோட்டியப்ப சாமியை தாக்கி விட்டு தப்ப முயன்றதால் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் நாகராஜை காலில் சுட்டு பிடித்ததாக தெரிவிக்கட்டது. காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags :
Advertisement