For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மெளனம் காப்பது ஏன்?” - காங்கிரஸுக்கு பாஜக கடிதம்!

04:16 PM Jun 24, 2024 IST | Web Editor
“கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மெளனம் காப்பது ஏன் ”   காங்கிரஸுக்கு பாஜக கடிதம்
Advertisement

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்கிரஸ் ஏன் மெளனமாக இருக்கிறது என பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா கேள்வி எழுதியுள்ளார்.

Advertisement

இதுகுறித்து ஜெ.பி.நட்டா காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

“தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சியின் கள்ளச்சாராயம் குடித்து 57 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. கணவரை இழந்த மனைவிகளும், தந்தையை இழந்த குழந்தைகளின் அழுக்குரலின் காட்சிகள் அனைவரையும் பேச்சற்ற நிலைக்கு தள்ளியுள்ளது. இத்தகைய பேரிடர் நடந்த போது, உடனடியாக மக்களை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், அரசும் காவல்துறையும் பிரச்னைகளில் இருந்து தப்பிப்பதில் மும்முரமாக இருந்தது. அதனால், மேலும் பலர் உயிரிழக்க நேரிட்டுள்ளது. இது அரசு நடத்திய கொலை.

இந்த சம்பவம் குறித்து விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள திமுகவின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார். மாநில காவல்துறையோ, சிபிசிஐடி காவல்துறையினரோ நேர்மையான விசாரணை நடத்துமா? கருணாபுரம் பகுதியில் அதிகளவில் தலித் மக்கள் வாழ்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர். இவ்வளவு பெரிய பேரழிவு நடந்தபோது, ​​உங்கள் தலைமையிலான காங்கிரஸ் கட்சி இதைப் பற்றி மௌனம் காத்தது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

இந்தியா கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, அரசுக்கு எதிராக குரல் கொடுக்காமல், மக்களையே குறை கூறியுள்ளார். இத்தருணத்தில், சிபிஐ விசாரணைக்கு செல்லவும், முத்துசாமியை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்கவும் திமுக-இந்தியக் கூட்டணி தமிழக அரசை நீங்கள் வலியுறுத்த வேண்டும் என்று பாஜகவும் ஒட்டுமொத்த தேசமும் கோருகின்றன.

ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி அமைதியை கடைபிடிப்பதை கைவிட்டு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சென்று சந்திக்கவில்லை என்றாலும், இப்பிரச்னை குறித்து குறைந்தபட்சம் குரல் எழுப்பவேண்டும். நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு நடைபெறும் போராட்டத்தில் உங்களையும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement