For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அதிக தொகுதிகளை கைப்பற்றுவது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு?

07:22 PM Jun 01, 2024 IST | Web Editor
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அதிக தொகுதிகளை கைப்பற்றுவது யார்  தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு
Advertisement

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் வெல்லப்போவது யார்? எந்த கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றும்? தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு என்ன சொல்கிறது பார்க்கலாம்.

Advertisement

நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வாக்குப்பதிவு இன்றோடு நிறைவடைந்துள்ளது. இதனை அடுத்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Imageஇந்நிலையில், நாட்டை ஆளப்போவது யார்? பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியா அல்லது காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியா என்ற எதிர்பார்ப்புடன் நாட்டிலுள்ள 140 கோடி மக்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

இதனிடையே இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவுற்ற நிலையில், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

குறிப்பாக தமிழ்நாட்டை பொறுத்தவரை 39 நாடாளுமன்ற தொகுதிகளில் யார் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி,

Image

சிஎன்என் கருத்து கணிப்பில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 36 - 39 வரை திமுக கூட்டணி வெற்றி வாகைச் சூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே போன்று அதிமுக கூட்டணியை பொறுத்தவரை 0 - 2 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளது. பாஜக கூட்டணி 1 தொகுதியில் வெல்ல வாய்ப்புள்ளது. நாம் தமிழர் கட்சி உள்பட பிற கட்சிகள் 0 - 2 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

Image

இந்தியா டுடே கருத்து கணிப்பின் படி மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 33 - 37 வரை திமுக கூட்டணி வெற்றி வாகைச் சூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே போன்று அதிமுக கூட்டணியை பொறுத்தவரை 6 - 8 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளது. பாஜக கூட்டணி 2 - 4 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளது. அதோடு, நாம் தமிழர் கட்சி உள்பட பிற கட்சிகள் எந்த தொகுதியையும் வெல்ல வாய்ப்பில்லை எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

என்டிடிவி கருத்து கணிப்பின் படி மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 34 - 38 வரை திமுக கூட்டணி வெற்றி வாகைச் சூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை ஒரு தொகுதி கூட வெல்ல வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணி 0 - 5 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளது. அதோடு, நாம் தமிழர் கட்சி உள்பட பிற கட்சிகள் எந்த தொகுதியையும் வெல்ல வாய்ப்பில்லை எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று, Republic-PMARQ வெளியிட்ட கருத்து கணிப்பு பின்வருமாறு:

Image

இதே போன்று, INDIA NEWS-D DYNAMICS வெளியிட்ட கருத்து கணிப்பு பின்வருமாறு:

Image

இதே போன்று, ABP-CVOTER வெளியிட்ட கருத்து கணிப்பு பின்வருமாறு:

Image

இதே போன்று, INDIA TV-CNX வெளியிட்ட கருத்து கணிப்பு பின்வருமாறு:

Image

Tags :
Advertisement