கோட்டை யாருக்கு? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!
08:39 AM Jun 04, 2024 IST
|
Web Editor
Advertisement
தமிழ்நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
Advertisement
18வது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வெற்றிபெறுவோம் என பாஜக கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியும் கூறி வரும் நிலையில், மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்ற எதிர்பார்பப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில், 2024க்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 542 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தலைவிதி இன்று தீர்மானிக்கப்படுகிறது. முதலில் தபால் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து, எட்டு முப்பது மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.
Next Article