Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ள வேட்பாளர்கள் யார் யார்?

01:00 PM Feb 17, 2024 IST | Jeni
Advertisement

நாடாளுமன்ற தேர்தல் களத்தில் திருச்சி மக்களவை தொகுதியில் எந்தெந்த கட்சிகள் சார்பில் யாரெல்லாம் போட்டியிட வாய்ப்புள்ளது என்பது பற்றி நியூஸ் 7 தமிழின் களம் யாருக்கு பகுதியில் காணலாம்.

Advertisement

திமுக தரப்பில் திருச்சி மக்களவை தொகுதியை மீண்டும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கி,  கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சு. திருநாவுக்கரசரையே மீண்டும் வேட்பாளராக நிறுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல மதிமுக பொதுச்செயலாளர் துரை வைகோவும்,  பெரம்பலூர் தொகுதி கிடைக்காதபட்சத்தில் அமைச்சர் கே.என்.நேருவின் மகனான அருண் நேருவும் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் ஆதரவாளரும், புதுக்கோட்டை மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளருமான கருப்பையா,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப. குமார் ஆகியோருக்கு வாய்ப்பிருப்பதாகவும்,  இவர்களுள் ஒருவரையே கட்சி வேட்பாளராக அறிவிக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள் : ராமநாதபுரம் தொகுதியில் மோதுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் வேட்பாளர்கள் யார் யார்?

பாஜக சார்பில் களம் காண முன்னாள் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி ஆனந்த் தேர்வாகலாம் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags :
AIADMKBJPCongressDMKElection2024Elections2024LokSabhaElection2024MDMKParliamentElectionTrichy
Advertisement
Next Article