வறுமையை ஒழிக்க திமுக என்ன நடவடிக்கை எடுத்தது? ஆர்.பி.உதயகுமார் கேள்வி!
மதுரையில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து ஸ்டாலின் முதல்வர் பதவிக்கு வந்துள்ளார்.
வருடத்திற்கு 100 நாட்கள் சட்டமன்றம் நடத்தப்படும் என வாக்குறுதி அளித்த திமுக நடத்தவில்லை. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேசுவது நேரலை செய்யாமல் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. சட்டமன்றத்தில் கூடுதல் செலவிமான 3,000 கோடி ரூபாய் காட்டப்பட்டுள்ளது. இந்திய அளவில் கடன் வாங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மூலதன செலவு குறித்து எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார். நிதியமைச்சர் முழுமையாக பதில் அளிக்கவில்லை. மூலதன செலவிற்க்காக மின்சார கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை உயர்த்த கூடாது. திமுக ஆட்சி தொடர ஏதாவது ஒரு சாதனையை திமுகவால் கூற முடியுமா?
வரி முறைகேட்டில் ஈடுபட்டுது தான் திமுகவின் சாதனையாக உள்ளது. வறுமையை ஒழிக்க திமுக என்ன நடவடிக்கைகள் எடுத்தது? காவல்துறை கவன குறைவால் கரூர் துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது. கரூர் நிகழ்வு குறித்து எடப்பாடி பழனிச்சாமி கேள்வி கேட்டதற்கு முதல்வர் கோபப்படுகிறார். வடகிழக்கு பருவமழைக்கு முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்.
திமுக அரசு சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் ஜனநாயக படுகொலை செய்கிறது. இருமல் மருத்து தயாரிப்பு விவகாரத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பொறுப்பற்ற முறையில் பேசுகிறார். இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் தொடர்ந்து ஆய்வு செய்யவில்லை. திமுக அறிவித்த திட்டங்களை நிறைவேற்றவில்லை என்று தெரிவித்துள்ளார்.