For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“சிறுபான்மையினருக்கு எதிரியாக இருந்தோமோ?...கண்களை மூடி யோசிங்க” - இஃப்தார் நோன்பு திறக்கும் விழாவில் அண்ணாமலை பேச்சு!

சிறுபான்மையினருக்கு எதிரியாக இருந்தோமோ?, கண்களை மூடி யோசித்து பாருங்கள் என இஃப்தார் நோன்பு திறக்கும் விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
07:30 PM Mar 25, 2025 IST | Web Editor
சிறுபான்மையினருக்கு எதிரியாக இருந்தோமோ?, கண்களை மூடி யோசித்து பாருங்கள் என இஃப்தார் நோன்பு திறக்கும் விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
“சிறுபான்மையினருக்கு எதிரியாக இருந்தோமோ    கண்களை மூடி யோசிங்க”   இஃப்தார் நோன்பு திறக்கும் விழாவில் அண்ணாமலை பேச்சு
Advertisement

சென்னை எழும்பூரில் பாஜக சார்பில் இன்று(மார்ச்.25)  விழா நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன்  தமிழ்நாட்டில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிதலைவர்கள் பங்கேற்று இஃப்தார் நோன்பு திறந்து சிறப்புரையாற்றினர்.

Advertisement

அப்போது அண்ணாமலை பேசியதாவது “நாங்கள் சிறுபான்மை இன மக்களுக்கு எதிரி என்று  திமுகவினர் கூறுகிறார்கள். திமுகவினர் சிறுபான்மை மக்களுக்கு என்ன பண்ண இருக்கிறீர்கள்?, ஒரு இரண்டு பாயிண்ட் சொல்லுங்கள். முத்ரா கடன் திட்டத்தில் 32 லட்சம் கோடி ரூபாய் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 36 சதவீதம் சிறுபான்மையின மக்கள் பயனடைந்துள்ளனர்.

இஸ்லாமிய பெண் குழந்தை படிப்பதற்காக பள்ளி முடித்தவுடன் ரூ 51,000 கொடுக்கப்பட்டது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.  தேசிய ஜனநாயக கூட்டணி நாங்கள் என்றைக்காவது சிறுபான்மையினருக்கு எதிரியாக இருந்தோமோ என்று நீங்கள் கண்களை மூடி யோசித்துப் பாருங்கள்.

20 நாடுகளில் பாரதப் பிரதமருக்கு விருது கொடுத்துள்ளார், அதில் ஏழு நாடுகள் இஸ்லாமிய நாடுகள் . அனைத்து இஸ்லாமிய நாடுகளும் பாரத பிரதமருக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்திருக்கிறார் . இந்திய வரைபடத்தை  கொடுத்து முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் மணிப்பூர் ஏங்கு உள்ளது என்று கேட்டு அவர் சரியாக தொட்டு விட்டால் நான் அரசியலை விட்டு விலகுகிறேன். பாஜக மீது பழி போடுவதை முதலமைச்சர் முழு நேர வேலையாக வைத்துள்ளார்”

இவ்வாறு மாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement