தாகத்தால் தவிக்கும் தலைநகர் - பாஜகவுக்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்!
டெல்லி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அண்டை மாநிலங்களான ஹரியாணா, உத்தரப் பிரதேசத அரசுகளை கூடுதலாக தண்ணீர் திறக்க பாஜக வலியுறுத்த வேண்டும் என கெஜ்ரிவால் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. ஏற்கனவே வெயிலின் தாக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தண்ணீர் பிரச்னையும் தலைவிரித்தாடுகிறது. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் அரசியல் ஆதாயம் தேடாமல் அண்டை மாநிலங்களான ஹரியாணா, உத்தரப் பிரதேசத்தில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க பாஜக பேச்சுவார்த்தை நடத்தினால் அவர்களின் செயல் பாரட்டப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
“இந்த ஆண்டு வரலாறு காணாத வெப்பத்தை நாடு சந்தித்து வருகிறது. இந்த வெப்பத்தால் நாடு முழுவதும் மின்சார மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மின் தேவை அதிகரித்துள்ளது. தண்ணீர் தேவையும் வெகுவாக அதிகரித்துள்ளது. டெல்லிக்கு அண்டை மாநிலங்களில் இருந்து வரும் தண்ணீரும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் தேவை அதிகரித்து, வரத்து குறைந்துள்ளது.
इस बार पूरे देश में अभूतपूर्व गर्मी पड़ रही है जिसकी वजह से देश भर में पानी और बिजली का संकट हो गया है। पिछले वर्ष, दिल्ली में बिजली की पीक डिमांड 7438 MW थी। इसके मुक़ाबले इस साल पीक डिमांड 8302 MW तक पहुँच गयी है। पर इसके बावजूद दिल्ली में बिजली की स्थिति नियंत्रण में है, अन्य…
— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 31, 2024
இதற்கு நாம் அனைவரும் ஒன்று கூடி தேர்வு காண வேண்டும். எங்களுக்கு எதிராக பாஜகவினர் போரட்டம் நடத்துகின்றனர். இதனால் பிரச்னை தீர்ந்துவிடாது. இந்த நேரத்தில் அரசியல் செய்யாமல், அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற கேட்டுக்கொள்கிறேன். பாஜக ஆட்சி செய்யும் ஹரியாணா மற்றும் உத்தரப் பிரதேச அரசுடன் பேசி கூடுதலாக ஒரு மாத காலம் நீர் திறக்க சொல்ல வேண்டும். அது நடந்தால் டெல்லி மக்கள் பாஜகவின் செயலை பாராட்டுவார்கள். சுட்டெரிக்கும் வெயில் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. ஆனால் நாம் ஒண்றிணைந்து செயல்பட்டால் இந்த பிரச்னையிலிருந்து மக்களுக்கு தீர்வு வழங்க முடியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.