குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய வழக்கு - உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு
தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்றதிலிருந்து ஆர்.என் ரவிக்கும் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. மாநிலத்தால் அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. அதே போல் கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆளுநர் தரப்பு மீது இதே போன்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது தொடர்பாக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மசோதாக்களுக்கு ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்து உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து, குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதிக்க முடியுமா என்பது உள்பட இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திற்கு 14 கேள்விகள் எழுப்பி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடிதம் எழுதினார்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரைத்தது. 10 நாட்கள் நிகழந்த விசாரணையடுத்து கடந்த செப்டம்பர் 11ல் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நாளை இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல்.S.சந்தூர்கர் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது.