For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பீகாரின் காற்று தமிழ்நாட்டிலும் வீசுகிறதோ...? - பிரதமர் மோடி பேச்சு..!

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் பச்சை துண்டை மேலே சுழற்றியது பீகாரின் காற்று தமிழ்நாட்டிலும் வீசுவது போல் இருந்ததாக தெரிவித்தார்.
05:43 PM Nov 19, 2025 IST | Web Editor
கோவையில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் பச்சை துண்டை மேலே சுழற்றியது பீகாரின் காற்று தமிழ்நாட்டிலும் வீசுவது போல் இருந்ததாக தெரிவித்தார்.
பீகாரின் காற்று தமிழ்நாட்டிலும் வீசுகிறதோ       பிரதமர் மோடி பேச்சு
Advertisement

கோவை கொடிசியாவில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் பிரதமரின் கிசான்  திட்டத்தின் 21வது தவணையாக ரூ.18,000 கோடி நிதியை பிரதமர் மோடி விடுவித்தார். இதையடுத்து பேசிய பிரதமர் மோடி,  " இந்த நிகழ்ச்சிக்கு வரும் போது விவசாயிகள் துண்டை சுழற்றி மேலை காட்டினார்கள். பீகாரின் காற்று சற்று இங்கும் வீசுகிறதோ..? என்று தோன்றியது” என்றார்.

Advertisement

மேலும் அவர், "இயற்கை விவசாய என்பது உணர்வுபூர்வாமனது. விவசாயத்தை நவீன முறையில் எடுத்து சென்றால் நமது நாட்டின் பொருளாதாரம் மேம்படும்.  ஜி.எஸ்.டி வரி குறைப்பால் விவசாயிகளுக்கு பல நன்மைகள் கிடைக்கப்பெற்றுள்ளது. பிரதமரின் விவசாயிகளின் கெளரவ நிதி திட்டத்தில் சற்று முன் 18000 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தேசத்தின் 4 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் போடப்பட்டுள்ளது.

இயற்கை வேளாண்மையானது நஞ்சில்லா உணவு முறைக்கு மாற்றாக இருக்கும். அது பாரதத்தின் சுதேசியான கருத்து.  தென்னிந்தியா விவசாயிகள் இயற்கை பஞ்சகாவியம் உள்ளிட்ட இயற்கை அற்புதங்களை பாதுகாத்து வைத்துள்ளார்கள். சிறுதானிய விவசாயத்தை உருவாக்க வேண்டும் அதுவே நாம் பூமி தாயின் மிக்கியமான ஒன்று. தமிழ்நாட்டில் கம்பு ,கேழ்வரகு ,சாமை உள்ளிட்டவை நமது உணவு பழக்க வழக்கங்களில் முக்கியான ஒன்று. உலகளாவிய சந்தைகளில் ராசாயன கலக்காத உணவு பொருட்கள் மற்றும் இயற்கை விவசாயத்திற்க்கு அதிக மதிப்பு உண்டு.

இயற்கை விவசாயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என மாநில அரசை கேட்டு கொள்கிறேன். இன்றிலிருந்து ஒரு ஏக்கராவது இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவதை துவங்குவோம். வேளாண் படிப்பில் இயற்கை விவசாயம் சார்ந்த படிப்புகளை கொண்டு வர முயல வேண்டும். விவசாய உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பாக விவசாயிகளுக்கு சந்தைப்படுத்துதலை சொல்லி தர வேண்டும். பூமி தாய் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். இந்த மாநாடு மூலம் இந்த தேசத்தின் இயற்கை விவசாயத்தை பெருக்க ஒரு உந்துகோளாக இருக்கும் என நினைக்கிறேன்" என்றார்.

Tags :
Advertisement