வயநாடு, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் ராகுல் காந்தி முன்னிலை!
09:09 AM Jun 04, 2024 IST
|
Web Editor
Advertisement
வயநாடு, ரேபரேலி ஆகிய இடங்களில் ராகுல் காந்தி முன்னிலையில் உள்ளார்.
Advertisement
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 272 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும்.
அதன்படி நாடு முழுவதும் பாஜக கூட்டணி 157 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகள் 62 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பின்னர் மற்ற கட்சிகள் 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். மேலும் அதேபோன்று வயநாடு, ரேபரேலி ஆகிய இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கிறார்.
Next Article