தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை!
டெல்லியில் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், முக்கிய தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், கேசவ விநாயகம், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் மற்றும் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் கூட்டணியை மேலும் வலுப்படுத்துவது, சட்டமன்ற தேர்தலுக்கு தயாராவது, மற்றும் உள்கட்சி பூசல்களை களைவது (கோஷ்டி பூசல்களை களைவது) உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். மேலும் அதிமுக உடனான கூட்டணி விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமித்ஷாவின் ஆலோசனை கூட்டத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை.