ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி நாகேந்திரன் உயிரிழப்பு!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை, கடந்த ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி சிலர் சுற்றி வளைத்து வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக காவல்நிலையத்தில் 8 பேர் சரண் அடைந்தனர். அவரிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதில் முன்விரோதம் மற்றும் பகை காரணமாக இந்த கொலை சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்தது.
இதையும் படியுங்கள் : தொடரும் கைது.. ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை!
தொடர்ந்து, இந்த கொலைவழக்கில் 27 நபர்கள் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இதற்கிடையே, இந்த கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான நாகேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார்.