For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஜி.டி.நாயுடு பெயர் வைத்தை பற்றி நீங்கள் பேசலாமா? அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!

கோவையில் திறக்கவுள்ள பாலத்திற்க்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டியுள்ளதை பலரும் பாராட்டுகிறார்கள் என்று அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.
10:39 AM Oct 09, 2025 IST | Web Editor
கோவையில் திறக்கவுள்ள பாலத்திற்க்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டியுள்ளதை பலரும் பாராட்டுகிறார்கள் என்று அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.
ஜி டி நாயுடு பெயர் வைத்தை பற்றி நீங்கள் பேசலாமா  அமைச்சர் எ வ வேலு பேட்டி
Advertisement

கோவை விமான நிலையத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் எப்போதும் நன்றி உள்ளம் கொண்டவர். யாராக இருந்தாலும் தங்களது அரசியல் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்தவர்கள், நாட்டிற்கு உழைத்தவர்களை எல்லாம் இது போன்று பெயர் சூட்டி அவர்களை கெளரவிப்பார்.

Advertisement

பாக்கெட்டிலே எம்.ஜி.ஆர் படத்தை வைக்க பயந்தவர்கள், கோவையில் கட்டப்பட்டுள்ள பாலத்திற்க்கு ஜி.டி.நாயுடு பெயர் வைத்தை பற்றி நீங்கள் பேசலாமா? பெயர் வைப்பதையெல்லாம் நீங்கள் குறை சொல்லலாமா. இலக்கணம் மற்றும் தமிழ் பேசுவதையெல்லாம் எங்களுக்கு கற்று தராதீர்கள்.

கோவையில் திறக்கவுள்ள பாலத்திற்க்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டியுள்ளதை பலரும் பாராட்டுகிறார்கள் நன்றி தெரிவிக்கிறார்கள். இந்த பாலத்தை முழுமையாக நிதி ஒதுக்கி செயல்படுத்தியது திமுக அரசு தான். அவினாசி சாலை பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டது தொடர்பாக சாதி பெயர் உள்ளதாக எழுந்துள்ள விமர்சனம் தொடர்பான கேள்விக்கு,

அவரை அப்படி அழைப்பது தான் வழக்கம். அதனால் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. தவெக கொடியை பார்த்து எடப்பாடி பழனிச்சாமி வலுவான கூட்டணி அமைக்கப்போவதாக பேசியது தொடர்பான கேள்விக்கு, வலுவான கூட்டணியா, நஞ்சுபோன கூட்டணியா என தெரியாது. 200 தொகுதியில் திமுக தான் வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement