"முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்று வெறும் கையோடு தான் தமிழ்நாடு வருவார் முதலமைச்சர்" - ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தி.விலக்கு பகுதியில் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்ற உள்ள இடத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் நேரில் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்,
"உசிலம்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை நிரைவேற்றி கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி., அவரை வரவேற்கும் விதமாகவும், அவரது எழுச்சி பேருரையை கேட்பதற்காக உசிலம்பட்டி மக்கள், மிக எழுச்சியாக, ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம் அமைக்கும் விதமாக இந்த உசிலம்பட்டி தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பேருரை மற்றும் எங்களின் வரவேற்பும் இருக்கும்,
இதுவரை 115 தொகுதிக்கு மேல் பிரச்சார பயணம் செய்து விட்டார் அத்தனை தொகுதிகளிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி மலரும் என்ற எழுச்சி பயணமாக அமைந்துள்ளது, இப்போது மதுரையில் நடைபெறும் எழுச்சி பயணமும் வரலாற்றில் முத்திரை பதிக்கின்ற வகையில் அமையும்,
மதுரைக்கு என்று சிறப்புகள் உள்ளது, உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, உலக புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோவில், உலக பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா, பிரசித்தி பெற்ற அம்மா திருக்கோவில் மதுரையில் தான் உள்ளது., உலக அதிசயத்தை கொண்டிருப்பது மதுரை, அதை விட அரசியல் தலைநகரம் மதுரை.
அரசியல் தலைநகரான மாமதுரையில் தான் இன்று எழுச்சி பேருரை ஆற்றவும், அவரது பேச்சை கேட்கவும் மக்கள் தயாராக இருக்கின்றனர், வெற்றி வாகை சூடும். முதல்வரின் சுற்றுப்பயணம் சுற்று பயணமா வெற்று பயணமா என அவர் வந்த பின் தான் தெரியும், ஏற்கனவே போன போது எப்படி விமர்சனங்கள் எழுந்தது என அவருக்கே நன்றாக தெரியும்.
இங்கு இருக்கும் முதலீட்டாளர்களுக்கே சட்டம் ஒழுங்கு சீர்கேடு காரணமாகவும், அமெரிக்கா விதித்துள்ள விதிமுறைகள் வரி முறைகளாலும் பாதி தேக்கம் அடைந்து கிடக்கிறது. திருப்பூரில் மொத்தமாக ஏற்றுமதியே இல்லை., இந்த நிலைமையெல்லாம் முதலமைச்சருக்கு நன்றாக தெரியும், இதற்கு எப்படி தீர்வு காண்பது என்பதற்கு எந்த பதிலும் இல்லை, ஏதோ கடிதம் எழுதி இருக்கிறதாக சொல்கிறார்,
ஏற்கனவே மூன்று முறை வெளிநாட்டிற்கு ஒவ்வொரு ஆண்டும் சென்று வரும் போதெல்லாம் வெறும் கையோடு தான் திரும்பி வருவதாகவே இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சட்டமன்றத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட கேட்டார் இதுவரை வெளியிடவில்லை, இதைச் செய்தோம் வானத்தை வில்லாக வளைத்தோம் மணலை கயிறாக பிரித்தோம் என சொல்கிறார்கள்,
இதை விட குறையாகவோ குற்றச்சாட்டாகவே சொல்லவில்லை., இங்கு இருக்கும் நிறுவனத்தை துபாய்க்கு அழைத்து சென்று அங்கு ஒப்பந்தம் போடுவதாக செய்திகள் வருகிறது. விளம்பர வெளிச்சத்தில் நாடகம் நடத்தி கொண்டிருக்கிறார்கள், விளம்பரம் என்ற வெளிச்சம் லைட் அமர்ந்து போய்விட்டால் படம் ஓடாது.
அதிகாரம் இருக்கும் வரை விளம்பர வெளிச்சம் வெளியே தெரியும், அதிகாரம் போய்விட்டால் வெளிச்சமும் போய் விடும், அதற்கு பின் உண்மை முகம் தெரிந்துவிடும், அதற்கான காலம் கனிந்து வந்து கொண்டிருக்கிறது, எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வர வேண்டும் என்பது தான் மக்களின் தீர்ப்பாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.