"அரசியலமைப்பை பாதுகாக்கும் கடமையை செய்வீர்கள் என நம்புகிறோம்" - சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ராகுல் காந்தி வாழ்த்து!
18வது மக்களவையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓம் பிர்லாவிற்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்துகள் தெரிவித்தார்.
18வது மக்களவையின் சபாநாயகர் பதவிக்கு ஆளும் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி சார்பில் முந்தைய மக்களவையின் சபாநாயகரான ஓம் பிர்லாவும், எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் காங்கிரஸின் கொடிக்குன்னில் சுரேஷும் போட்டியிட்டனர். சுதந்திரத்துக்குப் பிறகு முதல் முறையாக மக்களவைத் தலைவர் பதவிக்கு இன்று (ஜூன் 26) தேர்தல் நடைபெற்றது.
என்டிஏ கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஓம் பிர்லாவின் பெயரை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிய மத்திய அமைச்சர்கள், NDA கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் உள்ளிட்டோர் வழிமொழிந்தனர். இதனைத் தொடர்ந்து, இந்தியா கூட்டணி தரப்பில் காங்கிரஸின் கொடிக்குன்னில் சுரேஷ் பெயரை கனிமொழி மற்றும் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் முன்மொழிந்தனர்.
மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வுHTTPS://T.CO/WCICN2SIWX | #OMBIRLA | #SPEAKER | #LOKSABHA | #PARLIAMENT | #NDA | #INDIA | #NARENDRAMODI | #RAHULGANDHI | #NEWS7TAMIL | #NEWS7TAMILUPDATES PIC.TWITTER.COM/ZFN2SQTJWT
— NEWS7 TAMIL (@NEWS7TAMIL) JUNE 26, 2024
இதையடுத்து, இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் மக்களவைக் குழுத் தலைவர்களும் சுரேஷை மக்களவைத் தலைவராக்க வழிமொழிந்தனர். தொடர்ந்து, மக்களவைத் தலைவரை தேர்ந்தெடுக்க குரல் வாக்கெடுப்பை மக்களவை இடைக்காலத் சபாநாயகர் நடத்தினார். இதில், மக்களவைத் தலைவராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து சபாநாயகர் இருக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் ஓம் பிர்லாவை அழைத்து சென்று அவருக்கு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்து அமர வைத்தனர்.
மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஓம் பிர்லாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார். தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி உரையாற்றினார். அவர் பேசியதாவது,
“மக்களவை சபாநாயகர் தேர்தலில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உங்களை ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் மற்றும் இந்தியா கூட்டணி சார்பாக உங்களை வாழ்த்த விரும்புகிறேன். இந்த சபை இந்திய மக்களின் குரலைப் பிரதிபலிக்கிறது. அந்தக் குரலின் இறுதி நடுவர் நீங்கள். ஆளும் கட்சிக்கு அரசியல் அதிகாரம் உள்ளது. ஆனால் எதிர்க்கட்சியும் இந்திய மக்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
கடந்த முறையை விட எதிர்க்கட்சியினர் இந்திய மக்களின் குரலை இந்த முறை கணிசமாக பிரதிபலிக்கும். உங்கள் வேலையை செய்ய எதிர்க்கட்சிகள் உங்களுக்கு உதவ விரும்புகின்றன. மக்களவை சிறப்பாக அடிக்கடி செயல்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நம்பிக்கையின் அடிப்படையில் ஒத்துழைப்பது மிகவும் முக்கியம்.
எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதன் மூலமும், இந்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்த எங்களை அனுமதிப்பதன் மூலமும் இந்திய அரசியலமைப்பை பாதுகாக்கும் உங்கள் கடமையை நீங்கள் செய்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். உங்களையும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து உறுப்பினர்களையும் மீண்டும் ஒருமுறை வாழ்த்த விரும்புகிறேன்” என தெரிவித்தார்.