Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்” - மல்லிகார்ஜுன கார்கே..

08:05 PM Dec 26, 2023 IST | Web Editor
Advertisement

ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அவர்களின் குரல்களும் கேட்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர், அதையே எங்களுக்கும் தெரிவித்தார்கள்.." என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

Advertisement

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி எம்.பி. ஆகியோர் ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்களுடன் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு, தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், பீகார் காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில பொறுப்பாளர் மோகன் பிரகாஷ், ரஞ்சீத் ரஞ்சன், ஷகீல் அகமது உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே தன் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;

"வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் விரிவாக விவாதித்தோம். ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியாகும். ஆனால் கல்வான் தாக்குதலுக்குப் பிறகு நமது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பீர்பாஞ்சலில் அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் காஷ்மீரி பண்டிட்டுகளின் கொலைகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் முழு மாநில அந்தஸ்து கிடைப்பதை விரைவில் காணலாம். லடாக் மக்கள், அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ், அப்பகுதியின் பழங்குடியின மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ஒருமித்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் மோடி அரசு அவர்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றி வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் மற்றும் அவர்களின் குரல்கள் கேட்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்." என்று தெரிவித்துள்ளார்.

Tags :
CongressINCjammuKashmirLadakhMallikarjun KhargeNews7Tamilnews7TamilUpdatesRahul gandhi
Advertisement
Next Article