"ஓபிஎஸ் குறிஞ்செய்தியாக இல்லாமல் ஆதாரமாக காண்பிக்க வேண்டும்" - நயினார் நாகேந்திரன்!
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த ஓடாநிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 220வது நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, சரத்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நயினார் நாகேந்திரன், "பாஜக எப்போதும் நாட்டிற்காகவும் சுதந்திரத்திற்கும் உழைத்த தலைவர்களை பாராட்டுவதை தொடர்ந்து செய்து வருகிறது. இவர்களால் தான் நாம் சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம் என்றார்.
ஆடி 1ல் பொல்லான், ஆடி 15ல் குளாளன் நாடார் மற்றும் ஆடி 18ல் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்டார். நயினார் நாகேந்திரன் தீரன் சின்னமலை நன்றிக்கடனை நேரடியாக செலுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு திருநெல்வேலி செல்கிறார். எனவே இந்நாளில் அரசியல் பேச விரும்பவில்லை என அண்ணாமலை தெரிவித்தார்.
ஓ.பி.எஸ் பிரதமரை சந்திக்க வேண்டும் என நயினார் நாகேந்திரனுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதை ஓ.பி.எஸ் காண்பித்தது குறித்த கேள்விக்கு "குறிஞ்செய்தியாக இல்லாமல் ஆதாரமாக காண்பிக்க வேண்டும்" என நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்.