For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“திமுக மட்டுமல்ல இந்தியா கூட்டணியே பெண்களுக்கு எதிரானது” - வேலூரில் பிரதமர் மோடி பரப்புரை!

12:17 PM Apr 10, 2024 IST | Web Editor
“திமுக மட்டுமல்ல இந்தியா கூட்டணியே பெண்களுக்கு எதிரானது”   வேலூரில் பிரதமர் மோடி பரப்புரை
Advertisement

திமுக மட்டுமல்ல இந்தியா கூட்டணியே பெண்களுக்கு எதிரானது என பிரதமர் நரேந்திர மோடி வேலூரில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் தெரிவித்தார்.

Advertisement

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று (ஏப். 9) சென்னை வந்தார். சென்னை தியாகராய நகர் பனகல் பூங்காவிலிருந்து, சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார்.

பாஜக கூட்டணியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் (வேலூர்), கே.பாலு (அரக்கோணம்), செளமியா அன்புமணி (தருமபுரி), கே.எஸ்.நரசிம்மன் (கிருஷ்ணகிரி), அஸ்வத்தாமன் (திருவண்ணாமலை), கணேஷ்குமார் (ஆரணி)

அதைத் தொடர்ந்து இன்று வேலூர் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் (வேலூர்), கே.பாலு (அரக்கோணம்), செளமியா அன்புமணி (தருமபுரி), கே.எஸ்.நரசிம்மன் (கிருஷ்ணகிரி), அஸ்வத்தாமன் (திருவண்ணாமலை), கணேஷ்குமார் (ஆரணி) ஆகிய 6 வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று (ஏப். 10) காலை வேலூர் கோட்டை மைதானத்தில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

“தமிழில் பேச முடியாததற்கு மிகவும் வருத்தப்படுகிறேன். பொதுமக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் புத்தாண்டில் தமிழ்நாடு மேலும் வளர்ச்சி அடையும் என நம்புகிறேன். வேலூரில் புதிய வரலாறு ஏற்படப் போகிறது என்பது டெல்லியில் இருப்பவர்களுக்கு தெரியாது. வரலாறு, புராணம் போன்றவற்றில் சிறந்து விளங்கும் வேலூரை நான் வணங்குகிறேன். முருக பெருமானை நான் வணங்குகிறேன்.

வேலூர் பரப்புரை மேடையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி...

வரலாற்று சிறப்பு கொண்ட வேலூர் மீண்டும் ஒரு வரலாறு உருவாக்க இருக்கிறது. 21ம் நூற்றாண்டில் அனைவரும் இணைந்து பாரதம் தமிழ்நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக்குவோம். 2014-க்கு முன்பு உலகம் இந்தியாவை கேவலமாக பார்த்தது. செய்தித்தாள்களில் தினந்தோறும் ஊழல் செய்திகள் வந்தன. உலக அரங்கில் இந்தியா இன்று வலுவான நாடாக பார்க்கப்படுகிறது. விண்வெளி துறையில் பாரதத்தை வழிநடத்துவதில் தமிழ்நாடு முன்னணி வகிக்கிறது.

தமிழக இளைஞர்கள் இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறார்கள். உதான் திட்டத்தின் கீழ் வேலூரில் விமான நிலையம் அமையம் உள்ளது. சென்னை, பெங்களூரு தொழில் முனையம் வேலூர் வழியாக செல்கிறது. இந்தியா வல்லரசாக மாறுவதில் தமிழ்நாட்டின் பங்கு முக்கிய அங்கமாக உள்ளது. வளர்ச்சி அடைந்த இந்தியாவின் தலைமை பொறுப்பை தமிழ்நாடு ஏற்க வேண்டிய நேரம் இது.

ஹிந்து மதத்தின் பெண் சக்தியை அழிப்பேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார். திமுகவும் சநாதானத்தை அழிப்பேன் என்று பேசியுள்ளது. பெண்களுக்கு மரியாதை அளிக்காத கட்சி திமுக. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எப்படி அவமானப்படுத்தினார்கள் என்று நமக்கு தெரியும். திமுக மட்டுமல்ல இந்தியா கூட்டணியே பெண்களுக்கு எதிரானது தான். நாங்கள் பெண்களுக்கான மரியாதையை மீட்டுக் கொடுப்போம்.

தமிழில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி

கச்சத்தீவை இலங்கைக்கு திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தாரை வார்த்தன. தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்படும் போது காங்கிரஸ், திமுக கண்ணீர் வடிக்கிறது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களை இலங்கையில் இருந்து பாஜக  மீட்டு கொண்டு வந்தது. மீனவர்களுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டிற்கே திமுகவும், காங்கிரஸ் கட்சியும் துரோகம் செய்கிறது. கச்சத்தீவை யாருக்காக அவர்கள் இலங்கைக்கு கொடுத்தனர் என்பது நமக்கு தெரியும். ஆனால் காங்கிரசும், திமுகவும் அதுபற்றி பேசுவது இல்லை.

முழு திமுகவும் ஒரு குடும்பத்தின் நிறுவனமாக மாறிவிட்டது. திமுகவின் செயலால் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. ஊழல் செய்வதில் திமுக காப்புரிமை பெற்று இருக்கிறது. மத்திய அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு வழங்கி உள்ளது. போதைப் பொருள் விற்பனையில் சிறு குழந்தைகள் கூட விட்டு வைக்கவில்லை. வரும் மக்களவை தேர்தலில் திமுகவிற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்”

இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டார். 

Tags :
Advertisement