For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"விஜய் போன்று அவ்வப்போது புதிய கட்சிகள் கிளம்பதான் செய்யும்" - சீமான்!

தற்காலிக தோல்விக்காக நான் நிரந்தர வெற்றியை இழக்க விரும்பவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
12:04 PM Aug 05, 2025 IST | Web Editor
தற்காலிக தோல்விக்காக நான் நிரந்தர வெற்றியை இழக்க விரும்பவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
 விஜய் போன்று அவ்வப்போது புதிய கட்சிகள் கிளம்பதான் செய்யும்    சீமான்
Advertisement

மதுரை மறை மாவட்ட புதிய பேராயராக பொறுப்பேற்றுக்கொண்ட அந்தோணி சாமி சவரிமுத்துவை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "தமிழகத்தை மீட்போம், ஓரணியில் திரள்வோம் என்று சொல்கிறார்கள். தமிழகத்தை யாரிடம் அடமானத்தில் வைத்திருந்தார்கள்?

Advertisement

ஓரணியில் எதற்கு திரள வேண்டும்? நீட் தேர்வை ரத்து செய்வதற்கா? GST வரியை எதிர்ப்பதற்கா? தொகுதி மறுவரை என்ற பெயரில் தொகுதியை சீரழித்ததே கருணாநிதி தான். தேர்தல் வரும்போது பாசம், வேஷம் போட்டு நடிப்பார்கள். எனக்கு வயிற்றுப்பசி இல்லை. எனக்கு இருப்பது சுதந்திரப் பசி. சட்டமன்றத்தில் என் குரல் ஒலிக்க வேண்டும் என்றால் மக்கள் எனக்கு வாக்களித்து அனுப்ப வேண்டும்.

வணக்கத்திற்குரிய பேராயர் அவர்களை அன்பு மற்றும் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளேன். இது ஒரு வழக்கமான சந்திப்பு தான். புதிதாக ஒருவர் பொறுப்புக்கு வரும்போது நம்முடைய அன்பை பரிமாறி கொள்வது எனக்கு வழக்கம். தமிழகத்தை மீட்போம் என்றால் தமிழகம் யாரிடம் அடமானம் வைக்கப்பட்டுள்ளது?

இவ்வளவு நாளும் மீட்காமல் என்ன செய்தீர்கள். ஓரணியில் எதற்கு போராட வேண்டும். ஜிஎஸ்டி, காவிரி நீர், கச்சத்தீவு உள்ளிட்ட எதற்காக போராட வேண்டும். ஓரணியில் திரள்வோம் என்பது எதற்காக மொத்தமாகவே திரள்வோம். முதலமைச்சர் வங்க மொழிக்காக பரிந்துரை செய்கிறார். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இன்றைய நிலை.

தற்காலிக தோல்விக்காக நான் நிரந்தர வெற்றியை இழக்க விரும்பவில்லை. நான் நம்பர் ஒன் பார்ட்டியாக வேண்டியவன். எந்த சித்தாந்தத்தை காப்பாற்ற நீங்கள் அனைவரும் கட்சியை ஆரம்பித்தீர்கள். என்னை விட்டு விடுங்கள். யார் அடித்தாலும் தாங்குவதற்கு ஒருவர் வேண்டும். எனவே என்னை விட்டு விடுங்கள்
2026ல் எந்தக் கட்சி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்

எந்த கட்சியை வீழ்த்த வேண்டும் என்பது மக்கள் முடிவு செய்வார்கள். திமுக வரவேண்டும் என்று யாரும் வாக்கு செலுத்துவதில்லை. திமுக தீய ஆட்சி என்பதை ஒற்றுக்கொள்ள வேண்டும், அதை ஒழிக்க வேண்டும். திமுக எவ்வாறு அதிமுகவை வைத்து ஒழிக்க முடியும். விஜய் போல அவ்வப்போது புதிய கட்சிகள் கிளம்ப தான் செய்யும்.

விஜயகாந்த் வந்த போது இல்லாத எழுச்சியா? கமல் அரசியலுக்கு வந்த போது என்ன நடந்தது? ஊடகங்களில் திமுக, அதிமுக, மக்கள் நீதி மையம் என்று தான் இருந்தது. ஆனால் ஊடகங்களில் நாங்கள் மற்றவைகளில் தான் இருந்தோம். அமெரிக்கா உடைய கருத்தை வரவேற்கிறேன்

இந்திரா காந்தி போன்ற தலைவர்கள் தற்போது இல்லை, தொடர்ந்து நெசவாளர்கள்களுக்காக போராட்டம் நடக்க உள்ளோம். அருப்புக்கோட்டையில் ஏழாம் தேதி, பத்தாம் தேதி தூய்மை பணியாளர்களுக்காக போராட்டம் நடத்தப்படும். 17ம் தேதி - கோனவேரி கோன் கோட்டை மீட்பு போராட்டம் நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement