"மகாத்மாவின் போதனைகளைப் பின்பற்றி புகழ் சேர்ப்போம்" - பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம் !
மகாத்மா காந்தி, இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதில் பெரும்பங்காற்றியவர் என்பது நாம் அனைவரும் அரிந்த ஒன்று. அதுவும், ஆயுதம் ஏந்தாமல் அகிம்சை வழியலும் அன்பு வழியிலும் சுதந்திரம் வாங்கிக்கொடுத்தவர். 1869ஆம் ஆண்டு பிறந்த இவர் 1948 ஆம் ஆண்டு, ஜனவரி 30 ஆம் நாள் மாலை டில்லி பிர்லா மாளிகை தோட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30ம் தேதி தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
அந்த வகையில் இன்று காந்தியடிகளின் 78வது நினைவு நாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் காந்தியடிகளின் நினைவு நாளை போற்றும் வகையில் சென்னை, எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி திருவுருவ சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அகிம்சையும், வாய்மையும், அறவழியும் போதித்த மகாத்மா காந்தி நினைவு தினமான இன்று, தேசத்துக்காக அவர் செய்த தியாகங்களைப் போற்றி வணங்குகிறோம்.
அகிம்சையும், வாய்மையும், அறவழியும் போதித்த மகாத்மா காந்தி அவர்கள் நினைவு தினமான இன்று, தேசத்துக்காக அவர் செய்த தியாகங்களைப் போற்றி வணங்குகிறோம்.
சுதந்திர இந்தியாவுக்கான மகாத்மாவின் கனவுகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றி, அவருக்கு உண்மையான அஞ்சலி செலுத்தி வருகிறது நமது மாண்புமிகு… pic.twitter.com/5hHvTNl9SV
— K.Annamalai (@annamalai_k) January 30, 2025
சுதந்திர இந்தியாவுக்கான மகாத்மாவின் கனவுகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றி, அவருக்கு உண்மையான அஞ்சலி செலுத்தி வருகிறது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தலைமையிலான மத்திய அரசு. அமைதி, சகிப்புத்தன்மை, ஒருமைப்பாடு, கலாச்சாரப் பாதுகாப்பு என, மகாத்மாவின் உயரிய போதனைகளைப் பின்பற்றி, அவருக்குப் புகழ் சேர்ப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.