For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குளித்தலை: கோயில் குடமுழுக்கு விழாவில் இரு தரப்பினர் மோதல்!

10:21 AM Nov 22, 2023 IST | Web Editor
குளித்தலை  கோயில் குடமுழுக்கு விழாவில் இரு தரப்பினர் மோதல்
Advertisement

குளித்தலை அருகே நடந்த கோயில் கும்பாபிஷேக விழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். 

Advertisement

கரூர் மாவட்டம்,  குளித்தலை அருகே காவல்காரன்பட்டி ஸ்ரீ அய்யனார் கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.  இவ்விழாவில் அப்பகுதிகளை சேர்ந்த பட்டியல் இனத்தவர் சிலர் சாமி கும்பிட சென்றபொழுது உள்ளே வரக்கூடாது என சிலர் பிரச்னை செய்யதனர்.  பின்பு பேச்சுவார்த்தை நடத்தி அனைவரும் சாமி கும்பிட்டு சென்றதாக கூறுகின்றனர்.  தொடர்ந்து 3 பேர் அப்பகுதியில் உள்ள கோயிலின் மேற்கூறைகளை உடைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது.  இதில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த அரவிந்த், செல்வகுமார், வசந்த் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.  பின்னர் மருத்துவமனையில் இருந்த அரவிந்த் கொடுத்த புகாரின் அடிப்படையில் 9 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள்:  இரவு பகலாக நீடிக்கும் உத்தரகண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணிகள்!!

பின்னர் காவல்காரன்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த குமார்,  கீர்த்திஸ்,  தாமோதரன்,  ஹரி,  கோபால் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.  நான்கு பேர் தலை மறைவாகி உள்ளனர்.  கைது செய்யப்பட்ட கோபால் கொடுத்த புகாரின் பேரில் அரவிந்த் உட்பட ஒன்பது பேர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து காவல்காரன்பட்டி ஆதிதிராவிடர் காலனி சேர்ந்த அரவிந்த்,  வசந்தகுமார்,  சரவணன்,  ஸ்ரீதர்,  சந்துரு,  சிவா,  செல்வகுமார் ஆகிய 7 பேரை கைது செய்த நிலையில் இருவர் தலைமறைவாகியுள்ளனர்,

தோகைமலை போலீசார் கைது செய்தவர்களை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உடல் நலம் குறித்து சோதனை செய்தனர்.  பின்பு குளித்தலை குற்றவியல் நடுவர் எண் 1-ல் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.  தொடர்ந்து காவல்காரன் பட்டி பகுதியில் பிரச்சினை ஏற்படாமல் இருக்கும் வகையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags :
Advertisement