Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றி குறித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் சந்தேகம் தெரிவித்தாரா? - நடந்தது என்ன?

12:04 PM May 17, 2024 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by ‘Fact Crescendo

Advertisement

பாஜக கூட்டணி வெற்றி குறித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கூறியதாக பகிரப்படும் கருத்து, அவர் எதிர்கட்சிகளின் கூட்டணியில் இருந்தபோது பேசியது என்றும் அது தற்போது தவறாக வழிநடத்தும்படி சித்தரிக்கப்படுகிறது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

2024 மக்களவைத் தேர்தலின் முதல் நான்கு கட்டங்கள் முடிவடைந்த நிலையில், 5வது கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 20-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தொடர்பான பல படங்கள் மற்றும் வீடியோக்களுடன் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

இந்நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் செய்தியாளர்களிடம் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “2014-ம் ஆண்டு வெற்றி பெற்றவர்கள், 2024-ம் ஆண்டும் வெற்றி பெற முடியுமா, முடியாதா என்று சொல்ல முடியாது” என்று நிதிஷ் குமார் கூறியுள்ளார். இந்த வீடியோவை பகிரும் போது,​ 2024 மக்களவைத் தேர்தலில், நரேந்திர மோடியின் வெற்றி குறித்து நிதிஷ் குமார் சந்தேகம் தெரிவித்ததாக தலைப்பிடப்பட்டுள்ளது. எனவே, நிதிஷ் குமார் மீண்டும் பாஜகவை விட்டு வெளியேற முயற்சிப்பதாக கிண்டல் செய்து வருகின்றனர். 

உண்மை சரிபார்ப்பு:

இந்த வீடியோ குறித்த உண்மை சரிபார்ப்பு, கூகுளில் முக்கிய வார்த்தை தேடல் மற்றும் கீஃப்ரேம்களை தலைகீழ் தேடலுக்கு உட்படுத்துவதன் மூலம் தொடங்கப்பட்டது. அதன்மூலம், ‘ABP News’ யூடியூப் சேனலில் இந்த வீடியோ 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. மேலும் கண்டறியப்பட்ட வீடியோ வைரலான வீடியோவின் 18.50 நிமிடங்கள் கொண்ட முழுமையான பதிப்பை கொண்டிருந்தது.

எனவே, வைரலான இந்த வீடியோ ஒரு ஆண்டிற்கும் மேலாக பழமையானது எனவும், சமீபத்திய மக்களவைத் தேர்தலுக்கும் இந்த வீடியோவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் கண்டறிய முடிந்தது. 2022-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு ராஜ்பவனில் நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது அவரிடம் 2024-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நிதிஷ் குமார், “2014-ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தவர்கள் 2024-ல் ஆட்சிக்கு வரமுடியுமா, இல்லையா என்று எதுவும் சொல்ல முடியாது” என்று அவர் பதிலளித்தார்.

2022-ம் ஆண்டு பீகாரின் 8வது முறையாக முதலமைச்சராக பதவியேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், “2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் 2024-லும் வருவார்களா? 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என தெரிவித்தார்.

முதலமைச்சர் நிதிஷ்குமார், என்டிஏ கூட்டணியை விட்டு வெளியேறிய பிறகு, நரேந்திர மோடியையும் பாஜகவையும் பெயரிடாமல் தாக்கினார். நிதிஷ் கூறுகையில், 'எதிர்கட்சி முடிவுக்கு வரும் என நினைப்பவர்களுக்கு, நாங்களும் எதிர்க்கட்சியில் இணைந்துள்ளோம் என தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்து கொண்டே இருக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

நிதிஷ்குமாரும் - பீகார் முதலமைச்சர் பதவியும்:

நிதிஷ் குமார் 2013-ம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகிய பிறகு, 2015-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று பீகார் மெகா கூட்டணியின் தலைவராக இருந்தார். பின்னர் 2017-ல் கூட்டணியில் இருந்து வெளியேறினார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர், நவம்பரில் நடைபெற்ற பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பங்கேற்றார்.

இதில், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஓரு அணியாகவும் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு அணியாகவும் போட்டியிட்டன. ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. கடந்த 2022 ஆகஸ்டில் பாஜக உடனான கூட்டணியை முறித்த நிதிஷ்குமார், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து புதிய அரசை அமைத்தார். இருப்பினும், இந்த கூட்டணியும் நீண்ட காலம் நீடிக்கவில்லை. 2024-ம் ஆண்டு நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியுடனான உறவை முடித்துக்கொண்டு மீண்டும் பாஜகவில் இணைந்தார். தற்போது மக்களவைத் தேர்தலில் ஜேடியுவும் பாஜகவும் இணைந்து போட்டியிடுகின்றன.

முடிவு:

வைரலான வீடியோ ஆகஸ்ட் 2022-ம் ஆண்டு நிதிஷ்குமார் பாஜகவில் இருந்து விலகி ஆர்ஜேடியில் இணைந்தபோது எடுக்கப்பட்டது எனவும், வீடியோவுடன் கூறப்பட்ட கூற்று தவறாக வழிநடத்துவதாகவும் கண்டறியப்பட்டது.

Note : This story was originally published by 'Fact Crescendo’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
BiharBJPCHIEF MINISTERElections2024loksabha election 2024Narendra modindaNews7Tamilnews7TamilUpdatesNitish Kumarrjd
Advertisement
Next Article