For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பீகாரில் ‘இந்தியா’ கூட்டணி தொகுதி உடன்பாடு... எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்?

03:07 PM Mar 29, 2024 IST | Web Editor
பீகாரில் ‘இந்தியா’ கூட்டணி தொகுதி உடன்பாடு    எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்
Advertisement

பீகாரில், மக்களவைத் தேர்தலுக்கான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு நிறைவு பெற்றுள்ளது.

Advertisement

பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு இம்முறை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் மகாபந்தன் கூட்டணியும் பிரதான அணிகளாக உள்ளன.  இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் அந்த மாநிலத்தில் புர்னியா, ஹஜிபுர் உள்ளிட்ட 26 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  இதில் காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இடதுசாரி கட்சிகள் 5 தொகுதிகளில் போட்டியிட உள்ளன.

பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் எந்தெந்த கட்சிகள் போட்டியிட உள்ளன என்பது குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று (மார்ச் 29) பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது. எனினும், கடிஹார் தொகுதியில் இன்னும் இழுபறி நிலவுவதாகவும்,  இங்கு காங்கிரஸ் போட்டியிட விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடிஹார் தொகுதி தற்போது ராஷ்ட்ரிய ஜனதா தளம் வசம் உள்ளது. புர்னியா தொகுதியையும் காங்கிரஸ் கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால், பீகாரில் காங்கிரஸ் கட்சிக்கு 8 முதல் 9 தொகுதிகள் வரை ஒதுக்கத் தயாராக இருப்பதாகவும், புர்னியா தொகுதியை மட்டும் தர முடியாது என்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐஎம்எல் கட்சிக்கு 3 தொகுதிகளும், சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியா கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளுக்கான தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

Tags :
Advertisement