பிரதமர் மோடியை வாழ்த்த எழுந்து நிற்காமல் நிதின் கட்கரி அவமதித்தாரா? உண்மை என்ன?
This news fact checked by Fact Crescendo
என்டிஏ கூட்டணி கூட்டத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து அனைவரும் எழுந்து நின்று கை தட்டும்போது, நிதின் கட்கரி இருக்கையில், அமர்ந்து கொண்டு அவமதித்ததாக வைரலா கிவரும் வீடியோ பொய்யானது என கண்டறியப்பட்டது.
கடந்த ஜூன் 7-ம் தேதி பழைய நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், என்டிஏ கூட்டணியின் தலைவராகவும், நாட்டின் பிரதமராகவும் நரேந்திர மோடியை கூட்டணித் தலைவர்கள் ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தனர். தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரப்பட்டது.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, நரேந்திர மோடிக்கு மற்றவர்கள் கைத்தட்டல் கொடுத்தபோது, நிதின் கட்கரி எழுந்து நிற்கவில்லை என வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்த உண்மை சரிபார்ப்பின்போது, வைரலான வீடியோ தவறானது என்று கண்டறியப்பட்டது.
உண்மை சரிபார்ப்பு:
யூடியூப்பில் முக்கிய வார்த்தைகளை பயன்படுத்தி உண்மை சரிபார்ப்பு தொடங்கப்பட்டது. இதன் விளைவாக, ANI செய்தி சேனலில் பதிவேற்றப்பட்ட வீடியோவின் முழு பதிப்பு கண்டறியப்பட்டது. அந்த வீடியோவின் தலைப்பில், “நேரலை: பிரதமர் மோடி NDA நாடாளுமன்றக் கட்சி கூட்டத்தில் உரையாற்றுகிறார் | NDA கூட்டம் | நாடாளுமன்றம் |டெல்லி” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் மூலம் இந்த வீடியோ ஜூன் 7 அன்று நேரடியாக ஒளிபரப்பப்பட்டது என கண்டறியப்பட்டது. நிர்மலா சீதாராமனுடன் நிதின் கட்கரி அமர்ந்திருப்பதை காணொளியில் காணலாம்.
வீடியோவின் 25:45 நிமிடங்களில் நரேந்திர மோடி மண்டபத்திற்குள் நுழைவதைக் காணலாம். அப்போது மண்டபத்தில் அமர்ந்திருந்த உறுப்பினர்கள் அனைவரும் அவருக்கு கரகோஷம் எழுப்பினர்.
வீடியோவின் 25:57 நிமிடங்களில், நிதின் கட்கரி நரேந்திர மோடிக்கு கைத்தட்டல் கொடுப்பதைக் காணலாம்.
தொடர்ந்து வீடியோவின் 29:41 நிமிடங்களில், மோடி மோடி என கோஷங்கள் எழுப்பப்பட்டது. 29:57வது நிமிடங்களில் நிர்மலா சீதாராமனுடன் நிதின் கட்கரி கைதட்டுவதைக் காணலாம். இந்த முழு வீடியோவில் 29:51 முதல் 30:04 நிமிடங்கள் வரையிலான வீடியோ தனியாக பிரிக்கப்பட்டு வைரலாக்கப்பட்டுள்ளது.
முழு வீடியோவையும் பார்க்கும்போது , நிதின் கட்கரி பலமுறை கைதட்டுவதைக் காணலாம்.