பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார் பிரிஜந்திரா சிங்!
ஹரியானா-ஹிசார் தொகுதி பாஜக எம்பி பிரிஜந்திரா சிங் அரசியல் காரணங்களுக்காக பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருகியுள்ள நிலையில், நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன.
இதையும் படியுங்கள் : “போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளுநரிடம் தெரிவித்தோம்” -இபிஎஸ்
இந்நிலையில், பாஜகவிலிருந்து விலகிய எம்.பி. பிரிஜேந்திர சிங், காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாக தகவல் தெரிவித்துள்ளார். ஹிரியானா - ஹிசார் தொகுதி எம்.பி.யான பிரிஜேந்திர சிங், பாஜகவில் இருந்து விலகியிருப்பதை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு உறுதிசெய்து உள்ளார். மேலும், பாஜக எம்.பி. பிரிஜேந்திர சிங் காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் காங்.கட்சியில் இணைந்தார்.
இதையடுத்து, ஹரியாணாவை சேர்ந்த பாஜக எம்.பி. பிரிஜேந்திர சிங், பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து திடீரென விலகியிருப்பது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது :
"அரசியல் அழுத்தம் காரணமாக பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளேன். ஹிசார் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்ற தனக்கு வாய்ப்பளித்ததற்காக கட்சிக்கும், கட்சியின் தேசியத் தலைவர் ஜெபி. நட்டா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு தனது சமுக வலைதளத்தில் பதிவிட்டு குறிப்பிடடுள்ளார்.
I have resigned from the primary membership of BJP,due to compelling political reasons.
I extend gratitude to the party, National President Sh. JP Nadda, Prime Minister Sh. Narendra Modi, & Sh Amit Shah for giving me the opportunity to serve as the Member of Parliament for Hisar.— Brijendra Singh (@BrijendraSpeaks) March 10, 2024