லோகேஷ் கனகராஜ் நடிக்கும் 'DC' படத்தின் டைட்டில் டீசர் வெளியானது!
‘மாநகரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து இவர் ‘கைதி’ படத்தை இயக்கினார். இப்படம் இவருக்கு பெரும் பெயரை பெற்றுத்தந்தது. தொடர்ந்து, இவர் மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களை இயக்கினார். லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற கான்செப்ட்டை தொடங்கி அதன் கீழ் தொடர்ந்து பல படங்களை இயக்கி வருகிறார். இதற்காகவே லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்து வருகிறது. சமீபத்தில் ரஜினியை வைத்து இவர் இயக்கிய 'கூலி' படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.
மேலும், இவர் கைதி 2, விக்ரம் 2 ஆகிய படங்களை இயக்க உள்ளார். இது தவிர தனது ஜிஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். இந்த நிலையில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.
#DC 💥
My brother @Dir_Lokesh and @iWamiqaGabbi in an @ArunMatheswaran film with @sunpictures 💪🏻🔥#AintNobody
🎤 Introducing the awesomely talented #RamKumar
🖋️ #Heisenberg pic.twitter.com/E5BCkwJ3fH— Anirudh Ravichander (@anirudhofficial) November 1, 2025
இப்படத்திற்கு ‘டிசி’ எனப் பெயரிட்டுள்ளது. இதில், தேவதாஸ் என்கிற கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜும் சந்திராவாக வாமிகா கபியும் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.