Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"மக்களுக்கு பயனளிக்கும் பணியை பிரதமர் மோடி தனது ஆட்சிக் காலத்தில் செய்யவில்லை” - மல்லிகார்ஜுன கார்கே பேட்டி!

01:04 PM Apr 14, 2024 IST | Web Editor
Advertisement

நாட்டு மக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் பெரிய பணி எதையும் பிரதமர் மோடி தனது ஆட்சிக் காலத்தில் செய்யவில்லை எனவும், பாஜகவின் தேர்தல் அறிக்கையை நம்பக் கூடாது எனவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

Advertisement

நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1 வரை நடக்க உள்ளது. பின்னர், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடக்க உள்ளது. இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட தேசிய கட்சிகள் நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், நாடும் முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த நாளான இன்று (ஏப். 14) டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை “மோடியின் கேரண்டி” என்ற பெயரில் பிரதமர் மோடி வெளியிட்டார். இவ்விழாவில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் உடனிருந்தனர்.

இந்நிலையில், தேர்தல் அறிக்கை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருப்பதாவது,

“விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப் போவதாகவும், வேளாண் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தப் போவதாகவும் கூறியிருந்தார். அதற்கான சட்ட உத்தரவாதத்தையும் அளிப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால், அவர் தனது பதவிக்காலத்தில் அப்படி எதுவும் செய்யவில்லை. நாட்டு மக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் பெரிய பணி எதையும் அவர் தனது ஆட்சிக் காலத்தில் செய்யவில்லை.

இளைஞர்கள் வேலை தேடி அலைகிறார்கள். விலைவாசி உயருகிறது. மோடிக்கு விலைவாசி உயர்வை பற்றியோ, வேலையில்லாத் திண்டாட்டத்தை பற்றியோ கவலையில்லை. இந்த 10 ஆண்டுகளில் மோடியால் ஏழைகளுக்கு எதுவுமே செய்ய முடியவில்லை. மோடியின் தேர்தல் அறிக்கையை நம்பக் கூடாது. இதன்மூலம், மக்களுக்கான நல்ல திட்டம் எதுவுமில்லை என்பது நிரூபனமாகியுள்ளது” என்று பாஜக தேர்தல் அறிக்கையை விமர்சித்துள்ளார்.

Tags :
BJPBJP ManifestoCongressElections With News7TamilElections2024IndiaINDIA Allianceloksabha election 2024Mallikarjun KhargeNarendra modindaNews7Tamilnews7TamilUpdatesPMO India
Advertisement
Next Article