Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கும்! - ஓபிஎஸ் பேட்டி!

01:08 PM Feb 07, 2024 IST | Web Editor
Advertisement

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement

தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் கட்சி நிகழ்வில் பங்கேற்பதற்காக முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ்-யிடம் அதிமுக கூட்டணி குறித்து அமித்ஷா “அதிமுக கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன” என கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஓபிஎஸ், மத்திய உள்துறை அமைச்சரின் பெருந்தன்மையை இது காட்டுகிறது என கூறினார்.

பின்னர் பாஜக 400 இடங்களை கைப்பற்றும் என மோடி கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “அவரவர் கட்சியை உயர்த்தி காண்பிப்பது அந்தந்த தலைவர்களின் பண்பாடு. உறுதியாக பாஜக கூட்டணி இந்தியாவை ஆளுகிற தனி பெரும்பான்மை பெறும்” என தெரிவித்தார்.

ஒபிஎஸ் பின்பு இருப்பவர்கள் கூலி ஆட்கள், உண்மையான அதிமுக தொண்டர்கள் இபிஎஸ் பக்கம் தான் இருக்கிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியது குறித்த கேள்விக்கு, “உண்மையான கூலி ஆட்கள் யார் என்பது நாடாளுமன்றத் தேர்தலில் தெரியும்” என ஒபிஎஸ் தெரிவித்தார்.

அமித்ஷா குறிப்பிட்டது உங்கள் அணியையா? எடப்பாடி அணியையா? என்ற கேள்விக்கு, “நாங்கள் தொடர்ந்து NDA கூட்டணியில் இருந்து கொண்டு தான் இருக்கிறோம். விலகி இருப்பது பழனிச்சாமி தான்” என தெரிவித்தார். தொடர்ந்து, எத்தனை இடங்களில் போட்டி என்ற கேள்விக்கு, “அதனை உறுதியாக உங்களிடம் சொல்வேன்” என ஒபிஎஸ் பதில் அளித்தார். 

Tags :
AIADMKAmitShahBJPedappadi palaniswamiElection2024EPSNarendra modindaNews7Tamilnews7TamilUpdatesOPSPanneer Selvam
Advertisement
Next Article