#BengaluruBuildingCollapse | உயிரிழந்தோர் எண்ணிக்கை 8-ஆக உயர்வு!
பெங்களூருவில் கட்டுமானப் பணியில் இருந்த அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று (அக்.22) மாலை 3 மணியளவில் பெங்களூரின் கிழக்குப் பகுதியில் உள்ள ஹோரமாவு அகாரா என்ற பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டடம் திடீரென முழுமையாக இடிந்து விழுந்தது. இதில் அந்த கட்டிடத்திற்குள் வேலை பார்த்து தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதன் பேரில் ஹெண்ணூர் போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து, பொக்லைன் எந்திரம் உதவியுடன் அங்கு மீட்பு பணிகள் தொடங்கியது. சுமார் 16 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது. மேலும், 6 பேர் பெங்களூரில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக கட்டட உரிமையாளரின் மகன் மோகன், ஒப்பந்ததாரர் முனியப்பா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.