மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் 110 பேர் முஸ்லிம்களா? உண்மை என்ன?
This news fact checked by Newschecker
மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் 20% அதாவது 110 பேர் முஸ்லிம்கள் என வைரலாகிவரும் தகவல் பொய்யானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியானது. இதில் இந்தியா கூட்டணி 234 தொகுதிகளையும், என்டிஏ கூட்டணி 293 தொகுதிகளையும் கைப்பற்றின. தொடர்ந்து, பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். நாடாளுமன்ற தேர்தலில் 20% எம்பிக்கள் அதாவது 543ல் 110 பேர் முஸ்லிம்கள் என தகவல் வைரலாகி வருகிறது.
இதுகுறித்த உண்மையை சரிபார்க்க newschecker சார்பில் முடிவு செய்யப்பட்டது.
உண்மை சரிபார்ப்பு:
"முஸ்லீம் எம்.பி.க்கள் மக்களவை" என்ற முக்கிய வார்த்தை தேடல் நடத்தப்பட்டது. தன் விளைவாக “இந்த ஆண்டு மக்களவைக்கு 24 முஸ்லிம்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டது” போன்ற பல செய்தி அறிக்கைகளை கண்டறியச் செய்தது. இந்த எண்ணிக்கை 2019-ம் ஆண்டை விட இரண்டு பேர் குறைவு என கண்டறியப்பட்டது.
முடிவு:
எனவே, மக்களவைத் தேர்தல் 2024-ல் 24 முஸ்லிம் எம்.பி.க்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர் எனவும், வைரலாகிவருவது போல 110 பேர் அல்ல எனவும் நிரூபணம் செய்யப்பட்டது.
Note : This story was originally published by Newschecker and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.