டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், அண்ணாமலை சந்திப்பு!
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அண்ணாமலை சந்தித்துள்ளார். தமிழக தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜக கூட்டணியில் இருந்து விலகியது. தற்போது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் இரண்டு கட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே மத்திய அமைச்சர் அமித் ஷா, அதிமுகவுக்காக கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கிறது என தெரிவித்தூள்ளார்.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லியில் அமித் ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள அரசியல் சூழல் குறித்து ஆலோசனை செய்ததாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,
சந்திப்பு #Delhi | #TamilNadu | #Annamalai | #AmitShah | #BJP | #LokSabhaElections2024 | #Meeting | #parliamentelection2024 | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/IdjsvKYE5s
— News7 Tamil (@news7tamil) February 7, 2024
“மோடி தலைமையை ஏற்று யார் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்தாலும் எங்கள் கதவுகள் திறந்தே இருக்கும் என்றுதான் அமித்ஷா கூறினார். எந்தக் கட்சியையும் குறிப்பிட்டு அமித் ஷா சொல்லவில்லை. அமித் ஷா சொன்னபடி கூட்டணி கதவு எல்லோருக்கும் திறந்து இருக்கிறது. திமுக கூட்டணியில் இருந்துகூட யார் வேண்டுமானாலும் வரலாம். எத்தனையோ கட்சிகள் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. யாரையும் வற்புறுத்தப் போவதில்லை" இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.