For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“கோயம்புத்தூரில் முக்கிய விக்கெட் விழப்போகிறது!” - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சூசகம்!

09:03 PM Feb 25, 2024 IST | Web Editor
“கோயம்புத்தூரில் முக்கிய விக்கெட் விழப்போகிறது ”   பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சூசகம்
Advertisement

விளவங்கோடு எம்எல்ஏ விஜயதரணி போன்று கோயம்புத்தூரில் முக்கிய விக்கெட் விழப்போகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

Advertisement

மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

232 தொகுதிகளில் என் மண் எண் மக்கள் யாத்திரை நிறைவு பெற்றிருக்கிறது. பல்லடத்தில் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மேலும் மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் விழா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் இதன் தாக்கம் இருக்கும். அதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

தொண்டர்களை கஷ்டப்பட்டு அதிமுகவினர் வலை போட்டு சேர்க்கின்றனர். ஆனால் நாங்கள் தலைவர்களை இழுக்கிறோம். கூட்டணி பங்கீடு குறித்து திமுக பேசிவருவது என்பது திமுக WARM UP பண்ணிக் கொண்டிருக்கிறது. வாக்கு எண்ணிக்கையின் போது வெற்றியாளர் யார் என்பது தெரியும்.

மத்திய நிதி அமைச்சரின் வார்த்தைகளில் எந்த தவறும் இல்லை. சில மனிதர்களுக்கு கொழுப்பு அதிகமாக இருக்கும் போது எங்களது மொழிகளும் அதன் பெயரிலே இருக்கும். முதலில் கொங்கு பகுதி தமிழனாக இருந்தேன். அரசியலுக்கு வந்து விட்டால் அது வேலைக்கு ஆகாது.

தெர்மாகோல் விஞ்ஞானிகள் எல்லாம் தற்பொழுது நமக்கு அட்வைஸ் கொடுக்கிறார்கள். சிலருக்கு அவர்களது மொழியில் பதில் அளிக்க வேண்டிய நிலை உள்ளது. நிர்மலா சீதாராமன் சில இடங்களில் இது போன்று பேச வேண்டியது உள்ளது.

எந்த வார்த்தையில் பேசுகிறார்களோ அதே மாதிரியே என்னுடைய பதிலும் இருக்கும். கூட்டணி குறித்து பிரதமர் நிகழ்வு நடைபெறும்போது பார்க்க இருக்கிறீர்கள். பிரதமரின் கரத்தை யாரெல்லாம் வலுப்படுத்த நினைக்கிறார்களோ எல்லோரையும் வரவேற்கிறோம். பொறுத்திருந்து பாருங்கள் பெரிய கூட்டணி இருக்கும் பெரிய மாற்றத்திற்கான அமைப்பாக இருக்கும்.

மோடி மூன்றாவது முறையாக ஆட்சியில் இருக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. 2024 தேர்தலுக்கான மாற்றம் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலுக்கானதாக இருக்கும். பாஜக 400 சீட்டுகளை கடந்து மோடி பிரதமராக வரும்போது தமிழகத்தில் பாஜகவில் பெரும்பான்மையான எம்பிக்கள் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை.

45 நாள் எங்கள் உழைப்பு மிகப்பெரிய சூறாவளியாக இருக்கும். எல்லா உழைப்பையும் போட்டு விட்டோம் நாளை மாலை 5 மணிக்கு கோயம்புத்தூரில் என்ன நடக்கிறது என பாருங்கள்? என்றார்.

Tags :
Advertisement