Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாஜக தமிழக வேட்பாளர் பட்டியல் எப்போது? வானதி சீனிவாசன் தகவல்!

01:43 PM Mar 04, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் பாஜக தரப்பில் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்க குழு அமைக்கப்பட உள்ளதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும்,  கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

Advertisement

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் பாஜக மைய குழு கூட்டம் இன்று நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன்,  பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி,  சட்டமன்ற பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன்,  பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும்,  கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து,  பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும்,  கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

"பாஜக தரப்பில் மாநில அளவில்,  ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் 2 பேர் கொண்ட குழு 2 நாட்களில் அனுப்பப்படுகிறது.  ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும்,  அந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் நேரில் சென்று தங்கள் விருப்பங்களை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.  மாநில அளவிலான தேர்தல் குழு அமைக்கப்பட்டு,  அந்த குழுவிடம் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் கொடுக்கப்படும்.

தயாரிக்கப்பட்ட உத்தேச வேட்பாளர்கள் பட்டியலை,  மாநில தேர்தல் குழுவானது, வருகின்ற 6 ஆம் தேதி டெல்லி தலைமையிடம் ஒப்படைக்கும்.  டெல்லி செல்லும் மூத்த தலைவர்கள், உத்தேச பட்டியலை ஒப்படைத்த பின், தமிழ்நாட்டில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
AnnamalaiBJPelection 2024loksabha election 2024nainar nagendranvanathi srinivasan
Advertisement
Next Article