For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

2024 மக்களவைத் தேர்தல் : ஆட்சியைக் கைப்பற்றப்போவது யார்..? - வெளியானது கருத்துக் கணிப்பு முடிவுகள்!

07:51 PM Jun 01, 2024 IST | Web Editor
2024 மக்களவைத் தேர்தல்   ஆட்சியைக் கைப்பற்றப்போவது யார்      வெளியானது கருத்துக் கணிப்பு முடிவுகள்
Advertisement

2024 மக்களவைத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.

Advertisement

இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று மாலையுடன் நிறைவடைந்தது.  இதுவரை ஆறு கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் இதில் மொத்தம் 485 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று ஏழாம் கட்ட வாக்குப்பதிவு காலை 7மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 6மணிக்கு நிறைவடைந்தது. இதனுடன் 18வது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்தது.

இதனையடுத்து வரும் ஜுன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 7 மாநிலங்கள் ஒரு யூனியன் பிரதேசமென மொத்தம் 57 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில்,  அடுத்து இந்தியாவை ஆட்சி செய்யப்போவது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியா அல்லது காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனிடையே இன்று மாலை 6 மணியுடன் 7ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவுற்ற நிலையில், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதன் படி இந்திய அளவில் இந்தியா கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி பிடித்துள்ள இடங்களின் பட்டியல் குறித்து விரிவாக காணலாம்.

நாடாளுமன்ற தேர்தல் : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு - Times Now - ETG

Image

Republic TV-PMARQன் கருத்துக்கணிப்புகள்

Image

INDIA NEWS-D DYNAMICS -ன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்

Image

Republic TV-MATRIZEன் கருத்துக்கணிப்புகள்

Tags :
Advertisement